கண்ணியமாக நடந்து கொள்ளும் கமல், சிம்பு.. சிவகார்த்திகேயன் போல் மாட்ட போகும் 5 ஹீரோக்கள்

Simbu – Kamal : சினிமாவில் பிறந்து, வளர்ந்தவர்கள் தான் கமல் மற்றும் சிம்பு. ஆகையால் சினிமாவை கரைத்து குடித்தவர்கள் இவர்கள் என்று சொல்லலாம். அப்படி எல்லாம் தெரிந்தும் சில விஷயங்களில் கண்ணியமாக நடந்து வருகிறார்கள். ஆனால் மற்ற ஹீரோக்கள் அப்படி செய்யாமல் சூட்சமமாக சில விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதாவது இணைய கூலிப்படை வைத்து தங்களுக்கான ஆதரவை பெருக்கி இருக்கிறார்கள். ஆனால் கமல், சிம்பு போன்ற சில நடிகர்கள் இதை சுத்தமாக விரும்பவில்லை. சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு எதிராக ஒரு சம்பவம் வெடித்த நிலையில் அவரைப் பற்றி புகழ்வதற்காகவே ஒரு கூட்டம் இணையத்தில் கிளம்பி இருந்தது.

அப்போது தான் இணைய கூலிப்படை இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. அதாவது இப்போது முன்னணி ஹீரோக்களாக இருக்கும் தனுஷ், விஜய் சேதுபதி, கார்த்தி, சூர்யா போன்ற நடிகர்களும் இதே போன்று செய்து வருகிறார்களாம். தங்களுக்கு ஆதரவான செய்தியை இணையத்தில் அதிக பகிர செய்கிறார்கள்.

Also Read : சிவகார்த்திகேயன் போடும் நாடகம்.. வெட்ட வெளிச்சமாக்கிய பிரபலம்

அதுவும் குறிப்பாக விஜய் அரசியலுக்கு வருவதால் இதற்காக ஒரு குழு அமைத்து செய்தியை பரப்பி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஹீரோக்களை பற்றி மக்கள் அதிகம் பேசுவதன் மூலம் இன்னும் பிரபலம் கிடைக்கிறது. சமீபத்தில் இதனால் சிவகார்த்திகேயன் இவ்வாறு செய்வது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.

முன்னணி ஹீரோக்களும் இதை பின்தொடர்ந்து வருவதாக பிரபல பத்திரிக்கையாளர் சுப்பையர் கூறியிருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் இப்போது சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பது தான். சிவகார்த்திகேயன் போல் இவர்களும் விரைவில் சிக்குவார்கள் என்று ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது.

Also Read : போற போக்கில் கொளுத்தி போட்ட அண்ணாச்சி.. விஜய்யையும், ரஜினியையும் வச்சி செஞ்ச லெஜெண்ட்