ஃபுல் மப்பில் ஷூட்டிங் ஸ்பாட் வந்த நடிகை.. டென்ஷனில் காச் மூச் என கத்திய இயக்குனர்

இப்போதெல்லாம் ஹீரோக்களை விட ஹீரோயின்கள் ஆறு மணி ஆனால் வேற அவதாரம் எடுத்து விடுகிறார்கள். சரக்கு இல்லாமல் அவர்கள் பொழுது முடியவே முடியாது. அப்படித்தான் பிரபல நடிகை ஒருவரும் சமீப காலமாக குடிபோதைக்கு அடிமையாகி இருக்கிறார்.

எந்த அளவுக்கு என்றால் ஃபுல் போதையில் சூட்டிங் ஸ்பாட் வரும் அளவுக்கு அவர் மாறிவிட்டாராம். அப்படித்தான் சமீபத்தில் இளம் ஹீரோ ஒருவருடன் அவர் நடித்து வந்த படப்பிடிப்பில் இது பிரச்சினையாக மாறி இருக்கிறது. ஹீரோவுடன் நெருக்கமான ஒரு காட்சியை ஷூட் செய்ய இயக்குனர் திட்டமிட்டு இருக்கிறார்.

அதற்காக நடிகையை சரியான டைமுக்கு வர சொன்ன போது என்னால் முடியாது என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால் இயக்குனர் விடாமல் ஹீரோ உங்களுக்காக தான் காத்துகிட்டு இருக்கார் சீக்கிரம் வாங்க என கூறி இருக்கிறார். வேற வழியில்லாமல் நடிகையும் தட்டு தடுமாறி சூட்டிங் ஸ்பாட் வந்தாராம்.

Also read: குடும்பத்திற்காக மெழுகுவர்த்தியாய் எறிந்த நடிகை.. நரகமான வாழ்க்கை

தள்ளாடியபடியே வந்த அவரை பார்த்து டென்ஷனான இயக்குனர் எதுக்கு குடிச்சீங்க என கேட்டிருக்கிறார். அது ஒரு பெரிய வாக்குவாதமாக மாறிய நிலையில் படபிடிப்பு தளத்தில் இருந்த அனைவரும் பதட்டத்தோடு அதை பார்த்து இருக்கின்றனர். இது ஹீரோவின் காதுக்கும் சென்றிருக்கிறது.

உடனே ஓடி வந்த அவர் ஹீரோயினை சமாதானப்படுத்தி நாளைக்கு வாங்க என்று அனுப்பி வைத்திருக்கிறார். அதை தொடர்ந்து இயக்குனரிடமும் வேறு ஏதாவது காட்சிகளை எடுப்போம் அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும் என்று சமாதானப்படுத்தி இருக்கிறார். இப்படி நடிகை செய்த அட்ராசிட்டி தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also read: டிவி நடிகையை இஷ்டத்துக்கு வேட்டையாடிய மாஸ் நடிகர்.. அழுது புலம்பிய பரிதாபம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்