சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படத்தில் வில்லனாக மிரட்டியவர் தான் அந்த நடிகர். அதைத்தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த வில்லன் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. சமீபத்தில் கூட டாப் நடிகரின் திரைப்படத்தில் முக்கிய வில்லனாக இவர் நடித்திருந்தார்.
அந்தப் படம் மிகப்பெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இவருக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் பற்றிய ஒரு ரகசியம் தான் இப்போது மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது நடிகர் இப்போது தன் இரண்டாவது மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். விரைவில் இவர்கள் வீட்டில் குழந்தை சத்தமும் கேட்க இருக்கிறது.
Also read: திருமண நாளிலேயே நடந்த விவாகரத்து.. மறுமணம் செய்து கொண்டு படுஜோராக வாழும் நடிகை
இந்நிலையில் நடிகரின் முதல் மனைவி பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கோலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்திருக்கும் அந்த நடிகை இந்த வில்லன் நடிகரை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார். அதற்கு முன்பாகவே அந்த நடிகை வேறொருவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்று வாழ்ந்து வந்தார்.
அந்த சூழ்நிலையில் தான் இந்த வில்லன் நடிகரை இரண்டாவதாக அவர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் வில்லன் நடிகர் மீது ஏகப்பட்ட புகார்களை கூறிய அந்த நடிகை இவரையும் விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பிறகு சில காலம் தனிமையில் இருந்த நடிகர் வேறொரு நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
Also read: கர்ப்பத்தை காட்டி பணத்தை ஆட்டையை போட்ட நடிகை.. இமேஜை காப்பாற்றிக் கொள்ள திண்டாடிய நடிகர்
இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் அந்த நடிகைக்கும் இவர் இரண்டாவது புருஷன் தான். அதாவது பிரபலமான ஒரு சேனலின் ஆங்கரை திருமணம் செய்து கொண்ட அந்த நடிகை அவரை விவாகரத்து செய்துவிட்டு இந்த வில்லன் நடிகரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அப்படி பார்த்தால் நடிகருக்கு வாய்த்த இரண்டு மனைவிகளும் ஏற்கனவே விவாகரத்தானவர்கள் தான்.
அது மட்டுமல்லாமல் நடிகர் செய்த இரண்டு திருமணத்திலும் இவர் இரண்டாவது புருஷனாக தான் இருந்திருக்கிறார். இதைத்தான் இப்போது பலரும் நக்கலாக பேசி வருகின்றனர். சினிமாவில் முரட்டு தோற்றத்துடன் கம்பீரமாக இருக்கும் இவர் நிஜ வாழ்க்கையில் இரண்டாவது புருஷனாக வாக்கப்பட்டு இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கிளப்பியுள்ளது.