வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஒரே வருடத்தில் அதிக ஹிட் கொடுத்த நடிகர்.. சிவாஜியை ஓரம் கட்டிய சூப்பர் ஹீரோ

அக்கால தமிழ் சினிமாவில் இரு கண்களைப் போன்று திகழ்ந்தவர்கள் தான் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி. இவர்கள் இருவரின் படங்கள் என்றால் அதற்கு சேரும் கூட்டமே தனி. இவ்வாறு புகழின் உச்சியில் இருந்த இரு ஜாம்பவான்களும் ஒரு காலகட்டத்தில் போட்டிக்கு போட்டியாக படங்களை நடித்து தள்ளினார்கள்.

எம்ஜிஆர் அவர்கள் 1936ல் தன் சினிமா பயணத்தை தொடங்கினார். இவரின் முதல் படம் சதி லீலாவதி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் அப்படத்தில் ஹீரோவாக நடிக்கவில்லை அதன் பின் வெளிவந்த ராஜகுமாரி படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து இவரின் நடிப்பில் வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

Also Read: 90களில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான 5 டபுள் ஹீரோ படங்கள்.. 2k கிட்ஸ்க்கு தெரியாத இணைந்த கைகள்

இதைத்தொடர்ந்து 1963ல் தர்மம் தலை காக்கும் என்னும் படத்தில் சரோஜாதேவிக்கு ஜோடியாக இணைந்து நடித்திருப்பார். மேலும் இப்படம் 100 நாள் திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த இப்படமும் 100 நாளுக்கு மேல் ஓடியது.

மேற்கொண்டு இவர்கள் இருவரின் நடிப்பில் நீதிக்கு பின் பாசம் திரைப்படம் வெளிவந்தது. அதன் பின் சாவித்திரி உடன் இணைந்து எம்ஜிஆர் அவர்கள் பரிசு என்னும் படத்தில் நடித்திருக்கிறார். மேலும் அதே ஆண்டு பணம் தோட்டம் என்னும் படத்தில் சரோஜாதேவிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதுபோன்று ஐந்து படங்களை ஒரே ஆண்டில் நடித்து தள்ளிய நாயகன் நம் எம்ஜிஆர்.

Also Read: எவ்வளவு பெரிய ஆளாய் இருந்தாலும் காலடியில் தான் இருக்கணும்.. ஹிட்லர் ரேஞ்சுக்கு மிரட்டும் பாலா

அதே ஆண்டு இவருக்கு சளைத்தவர் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக நடிகர் திலகமான சிவாஜி கணேசன்  இருவர் உலகம், நான் வணங்கும் தெய்வம், குலமகள் ராதை, பார் மகளே பார் ஆகிய 4 படங்களில் நடித்திருக்கிறார். அவ்வாறு போட்டிக்கு போட்டியாக இருந்த அக்காலகட்டத்தில் ஒரு படத்தில் சிவாஜியை மிஞ்சியவர் நம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.

இவ்வாறு ஐந்து வெற்றி படங்களை கொடுத்து நடிகர் திலகம் சிவாஜி கணேசனை ஓரம் கட்டிய பெருமையை பெற்றவர் எம்ஜிஆர். இவர்கள் இருவரின் படங்கள் என்றென்றும் மறையாது மக்களின் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடித்து வருகிறது.

Also Read: எம்.ஜி.ஆரை விட பெரிய வள்ளல் இவர்தான்.. உண்மையிலேயே கர்ணனாக வாழ்ந்த நடிகர்

- Advertisement -

Trending News