சூர்யா, தனுஷ் மாதிரி கனவு கண்ட நடிகர்.. வயசு கோளாறில் நடிகையிடம் மயங்கி கிடக்கும் வாரிசு

Surya-Dhanush: இப்போது சினிமாவில் வாரிசு நடிகர்களின் வரவு அதிகமாகி விட்டது. அதில் கடும் முயற்சியை கொண்டு குறுகிய காலத்திலேயே முன்னுக்கு வந்த வாரிசுகளும் இருக்கிறார்கள். ஆனால் பிரபல நடிகர் ஒருவரின் வாரிசு இப்போது வயது கோளாறின் காரணமாக நடிகை ஒருவரின் மயக்கத்திலேயே இருக்கிறாராம்.

இதனால் கடுப்பான அந்த நடிகர் தன்மகன் மீது கடுங்கோபத்தில் இருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது. இப்படி கொந்தளிப்புடன் இருக்கும் நடிகர் வேறு யாரும் கிடையாது நம்ம சீயான் விக்ரம் தான். இவருடைய மகன் துருவ் இப்போது சினிமாவில் என்ட்ரி கொடுத்து விட்டார்.

Also read: லண்டனில் மீட்டிங் போடும் விஜய், சூர்யா.. விரைவில் வெளியாக இருக்கும் அடுத்த பட அப்டேட்

ஆனால் அப்பா பெயரை இவர் காப்பாற்றுவாரா என்று கேட்டால் அது கேள்விக்குறி தான். ஏனென்றால் அண்மை காலமாகவே இவருடைய நடவடிக்கை சரியில்லையாம். ஆதித்யா வர்மா படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதில் ஓவர் ரொமான்ஸ் செய்து நடித்திருந்தார்.

அந்த வகையில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த பனிதா சந்து உடன் தான் அவர் இப்போது ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறாராம். படத்தில் தான் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது என்று பார்த்தால் இந்த ஜோடி நிஜத்திலும் கெமிஸ்ட்ரியை ஒர்க்அவுட் செய்து விக்ரமின் பிபியை ஏற்றி வருகிறார்களாம்.

Also read: தவளை போல் தன் வாயால் கெட்ட தனுஷ் பட நடிகை.. பாலிவுட்டில் துரத்தப்பட்டதால் இங்கு தஞ்சமடைந்த ஹீரோயின்

தன் மகனையும் சூர்யா, தனுஷ் போல் பெரிய நடிகராக வேண்டும் என்று கனவு கண்டு வந்த விக்ரமுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்திருக்கிறது. மேலும் நடிப்பில் கவனம் செலுத்து என்று அவர் கூறியும் கூட துருவ் தன் போக்கில் இருப்பது அவரை ரொம்பவும் அப்செட் செய்து விட்டதாம்.

ஏற்கனவே இள ரத்தம் என்பதை காட்டும் வகையில் திமிரும், தெனாவட்டுமாக இருந்த துருவ் ஒருமுறை குடிபோதையில் கார் ஓட்டி மாட்டிக்கொண்டார். இப்படி மகனால் மன உளைச்சலை சந்தித்து வரும் விக்ரம் விரைவில் இதற்கான ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற தீர்மானத்தோடு இருக்கிறாராம்.

Also read: விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் நிறுவனம்.. காற்றில் பறந்த வாக்குறுதி, வாய்க்கு பூட்டு போட்ட கமல், ரஜினி, விஜய், சூர்யா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்