விஜய்யின் அரசியலுக்கு ஆலோசனை கூறிய நடிகர்.. உசிப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் வில்லன்

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடியவர் விஜய். இவர் தமிழ்நாட்டில் பல கோடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இதற்காக இவர் முப்பது வருடங்களாக போராடி தற்போது இவரை யாரும் அசைக்க முடியாத அளவிற்கு வளர்ந்து நிற்கிறார். அத்துடன் படங்களில் ஹீரோவாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு விழிப்புணர்வு ஆகவும் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருக்கிறார்.

அதற்காகவே இவர் அரசியலில் வரவேண்டும் என்று நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் இவர் வருகையை குறித்து கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. இதை இவர் நேரடியாக எந்த இடத்திலும் அறிவிக்கவில்லை என்றாலும் அவருடைய ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு கண்டிப்பாக வருவார் என்று கூறி வருகின்றனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் அஸ்திவாரம் போட்டு விட்டார்.

Also read: விஜய் இன்ஸ்டாகிராம் தொடங்க இதுதான் காரணம்.. கசிந்த உண்மை

அதற்கு ஏற்ப இவரது படங்களிலும் அரசியல் வசனங்கள் இடம் பெற்று வருகின்றன. கத்தி படத்தில் இறுதியில் வரும் பிரஸ் மீட் காட்சியில் அவர் பேசிய வசனங்களை இப்பொழுது கூட மறக்க முடியாது அளவுக்கு ட்ரெண்டிங்கில் உள்ளது. இதற்கு அடுத்து வெளிப்படையாகவே சர்க்கார் படத்தில் அரசியல் சார்ந்த திரைப்படமாகவே நடித்திருப்பார். அதன்பின் வந்த சில படங்களில் அரசியல் வார்த்தைகளை மையப்படுத்தி பேசியிருப்பார்.

தற்போது இதை வலுப்படுத்தும் விதமாக மக்கள் கட்சி நிர்வாகிகளை அழைத்து ஒவ்வொருத்தரிடம் தனித்தனியாக பேசுகிறார். அரசியலில் வரவேண்டும் என்றால் இந்த மாதிரியான விஷயங்களை செய்ய வேண்டும் என்று அரசியல் சம்பந்தப்பட்ட ஆலோசனை கூறி வருகிறார் ஒரு நடிகர். அதற்கு பிறகுதான் இவருடைய அரசியல் பிரவேசமே வேற மாதிரி போய்க்கொண்டிருக்கிறது.

Also read: விஜய்யுடன் நடித்த 5 கிளாமர் குயின்ஸ்.. எஸ் ஏ சி, இளைய தளபதி வச்சி உருட்டிய ஹீரோயின்கள்

விஜய் மன்றத்தின் கட்சி ஆட்களை அடிக்கடி சந்திப்பது, அவர்களுக்கு விருந்து கொடுப்பது இதுபோன்ற வேலைகளில் செய்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் அரசியல் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை செய்யும் படி விஜய்யை அவ்வப்போது உசுப்பேத்தி வருகிறார். இவருக்கு பின்னாடி இருக்கிற அந்த நடிகர் யார் என்றால் சர்க்கார் படத்தில் இவருக்கு வில்லனாக நடித்த பழ கருப்பையா தான்.

இவரை நேரடியாக விஜய் வீட்டுக்கு வரவழைத்துள்ளார். பிறகு அவர் வரும் நேரத்தில் விஜய் வாசலிலே நின்னு அவரை வரவேற்று உள்ளே கூட்டிட்டு போய் இருக்கிறார். பிறகு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை பேசி இருக்கிறார். அவர் அறிவுறுத்தலின் படி தான் தற்போது விஜய் அரசியலில் முக்கியமான வேலைகளை செய்யப் போகிறார். மேலும் இவர்கள் கூட்டணியில் விஜய்க்கு அரசியலில் எதிர்பார்த்தபடி நல்லது கிடைத்தால் ஓகே தான்.

Also read: குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்த 5 படங்கள்.. அப்பவே பட்டைய கிளப்பிய தளபதி

Next Story

- Advertisement -