பிரம்மாண்டமாக நடந்த 8-வது விஜய் டிவி அவார்டு நிகழ்ச்சி.. ரெண்டு முறை விருதை தட்டிச் சென்ற ஒரே சீரியல்

தமிழ் சினிமாவை பொருத்தவரை வெள்ளித்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு போலவே தற்போது சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. பொதுவாக எத்தனையோ சேனல்கள் இருந்தாலும் அதிகமாக பிரபலமாக இருப்பது சன் டிவி தான். ஆனால் தற்போது இந்த சேனலுக்கு இணையாக இன்னும் சொல்லப் போனால் இதற்கு மேலையும் ஒரு படி வளர்ந்து இருக்கிறது என்று சொன்னால் அது விஜய் டிவி மட்டும்தான்.

இதில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ, மற்றும் திறமைகளை வெளிக் கொண்டு வரும் நிகழ்ச்சிகளையும் மிக அற்புதமாக செய்து வருகிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு கலைஞரையும் கௌரவப்படுத்தும் விதமாக அவர்களுக்கு அங்கீகாரமாக கொடுக்கப்படும் ஒன்று விருதுகள். இது ஒவ்வொரு வருடமும் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

Also read: எம்ஜிஆர் முதல் அம்பி வரை.. பாக்கியலட்சுமி கோபி கலக்கிய விதவித கெட்டப்

இதனை அடுத்து 8வது விஜய் டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சி தற்போது நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் விஜய் டிவியின் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சீரியலுக்கு சிறந்த சீரியல் மற்றும் நமக்கு பிடித்த நடிகர் நடிகைகள் அனைவரும் விருதுகளை பெற்றிருக்கிறார்கள். அதில் எந்த சீரியலுக்கு விருது கிடைத்திருக்கிறது மற்றும் யார் யார் விருதை பெற்றிருக்கிறார்கள் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

இதில் சிறந்த இளம் ஜோடிக்கான விருது காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடிக்கும் வெண்ணிலா மற்றும் சூர்யா. பெஸ்ட் நெகட்டிவ் ரோல் கேட்டகிரியில் பாக்கியலட்சுமி சீரியல் நடிக்கும் ராதிகா. குழந்தை நட்சத்திரத்துக்கான விருது செல்லம்மாள் சீரியலில் நடிக்கும் மலர் பாப்பா. பெஸ்ட் டைரக்டர் ஈரமான ரோஜாவே 2 இயக்குனர் தாய் செல்வம். பெஸ்ட் ஜோடி என்ற விருது ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடிக்கும் பார்த்திபன் காவியா.

Also read: நிக்க கூட தெம்பில்லாத ரோபோ சங்கர்.. உண்மையை உடைத்த பிரபலம்

அடுத்ததாக தூள் மூவ்மெண்ட் டிஜே பிளாக் சூப்பர் சிங்கர் 9. சிறந்த காமெடி நடிகை என்ற விருதை பாக்கியலட்சுமி சீரியல் நடிக்கும் செல்வி அக்கா இவங்களோட உண்மையான பெயர் கம்பம் மீனா. முக்கியமாக நம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பெஸ்ட் சீரியல் விருதை வாங்கிய நாடகம் பாக்கியலட்சுமி தொடர். சிறந்த அம்மா விருதை வாங்கிய பாரதி கண்ணம்மா சௌந்தர்யா. சிறந்த மருமகள் முத்தழகு சீரியலில் இருக்கும் முத்தழகு.

பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டர் விருதை வாங்கிய பெண், தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நடிக்கும் தரிசிகா ராதா மற்றும் பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆண் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் கண்ணன். சிறந்த ஹீரோ பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா. சிறந்த ஹீரோயின் பாக்கியலட்சுமி சீரியல் நடிக்கும் பாக்கியா. புதுமுக நடிகைக்கான விருது ஈரமான ரோஜாவே 2 பிரியா. இவர்கள் அனைவருக்கும் நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.

Also read: இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்கள்.. முதல் 5 இடத்தை ஆக்கிரமித்த ஒரே சேனல்