சத்யராஜுக்கு மகனாக 67 வயது ஹீரோ.. ஜீரணித்துக் கொள்ள முடியாத கேரக்டர்

சினிமாவில் ஹீரோக்களை காட்டிலும் ஹீரோயின்கள் மிகக் குறுகிய காலத்திலேயே மார்க்கெட்டை இழந்து விடுவார்கள். இதனால் ஒரு காலகட்டத்தில் ஹீரோ உடன் ஜோடி போட்ட நடிகைகளை அதன் பிறகு அவர்களுக்கு அக்கா, அம்மா கேரக்டர்களில் நடிக்கும் நிலை தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ளது.

இதை பல படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தெலுங்கு சினிமாவில் சில கதாபாத்திர தேர்வு யாராலும் ஜீரணித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கும். இந்த ஹீரோவுக்கு இவர் தந்தையா, இவர் அம்மாவா என்று வயது வித்தியாசம் பார்க்காமல் கொடுத்திருப்பார்கள்.

Also Read : பழைய ரூட்டுக்கே திரும்பிய சத்யராஜ்.. மிரள வைக்க வரும் அவதாரம்

இது சில சமயங்களில் கேலி, கிண்டல்களையும் ஏற்படுத்தும். அந்த வகையில் சத்யராஜுக்கு தற்போது 68 வயது உள்ள நிலையில் அவருக்கு மகனாக 67 வயதுடைய ஹீரோவை போட்டிருந்தனர். அதாவது தெலுங்கு சினிமாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான வால்டர் வீரய்யா படத்தில் சிரஞ்சீவி தந்தையாக சத்யராஜ் நடித்திருந்தார்.

கிட்டத்தட்ட ஒரே வயது உடையவர்கள் எப்படி அப்பா, மகனாக ஒரே திரையில் பார்க்க முடியும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அதுமட்டுமின்றி வால்டர் வீரய்யா படத்திற்கு போட்டியாக வெளியான பாலகிருஷ்ணாவின் வீர சிம்மா ரெட்டி படத்திலும் இதே நிலைமை தான் ஏற்பட்டிருந்தது.

Also Read : நாங்க ரஜினி, கமல் கிடையாது.. பிரபு, சத்யராஜ் வருடத்திற்கு 10 படங்கள் வெளியிடுவதன் ரகசியம்

இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு அம்மாவாக ஹனி ரோஸ் நடித்திருந்தார். அதாவது பாலகிருஷ்ணாவை விட கிட்டத்தட்ட 31 வயது இளமையானவர் ஹனி ரோஸ். மகள் வயது உடைய நடிகையை அம்மாவாக படக்குழு தேர்ந்தெடுத்தது படத்திற்கு மோசமான விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

தொடர்ந்து இதுபோன்று கதாபாத்திரத்திற்கு தேவையான நடிகர்கள் மற்றும் நடிகைகளை தேர்வு செய்வதில் தெலுங்கு சினிமா கோட்டை விட்டுவிடுகிறது. ஆகையால் தான் அந்தப் படங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகி வருவதாக விமர்சனங்கள் எழுகிறது.

Also Read : சத்யராஜ், ரஜினிக்கு நிகராக மிரட்டிய 5 படங்கள்.. இப்பவும் மறக்கமுடியாத என்னம்மா கண்ணு சௌக்கியமா!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்