விஜய், அஜித்தை மீண்டும் ஆட்சி செய்ய வரும் 39 வயது நடிகை.. நயன்தாராவின் நம்பர் ஒன் இடத்திற்கு வச்ச ஆப்பு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக தன்னுடைய இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். திருமணம் ஆனாலும் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் இன்னும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் அவர் விஜய், அஜித் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்.

இப்போது அவருடைய இடத்தை மற்றொரு கதாநாயகி ஒருவர் தட்டிப் பறிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. அதில் குந்தவை என்ற இளவரசியாக நடித்து ரசிகர்களை இம்ப்ரஸ் செய்த த்ரிஷா தற்போது தமிழ் சினிமாவில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகி இருக்கிறார். டாப் ஹீரோக்களின் திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க இவருக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.

Also read: AK-62 ரிலீஸ் தேதியை லாக் செய்த விக்னேஷ் சிவன்.. உங்க ஸ்பீடு புரியுது ஆனா லோகேஷ் இருக்காரு பார்த்து

அந்த வகையில் இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இவர் விஜய்யுடன் இணைந்து கில்லி, குருவி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

அது மட்டுமல்லாமல் விஜய்க்கு அடுத்ததாக அவர் அஜித்துடனும் ஜோடி போட இருக்கிறார். தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்த முடித்திருக்கும் அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் தான் திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து கிரீடம், மங்காத்தா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர்.

Also read: 12 வருடங்களுக்குப் பிறகு இணையும் கூட்டணி.. சிம்புவுக்கு ஜோடியாகும் இளவரசி

இப்படி த்ரிஷா அடுத்த அடுத்த திரைப்படங்களில் பிஸியாகி கொண்டிருக்கிறார். இதனால் நயன்தாரா கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறாராம். ஏனென்றால் விஜய், அஜித் இருவரின் அடுத்த திரைப்படங்களில் நயன்தாரா தான் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் அந்த வாய்ப்பை திரிஷா பறித்துள்ளது அவருக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்துள்ளதாம்.

அது மட்டுமல்லாமல் த்ரிஷாவின் இந்த ரீ என்ட்ரி இளம் நடிகைகளின் வயிற்றிலும் புளியை கரைத்துள்ளது. தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகள் எப்படியாவது விஜய், அஜித்துக்கு ஜோடியாக நடித்து முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என்று போராடுகின்றனர். ஆனால் 39 வயதாகும் திரிஷா தற்போது அனைத்து வாய்ப்புகளையும் தட்டி தூக்குவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also read: நயன்தாரா போல் நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.. மேடையில் அதிரடியாக பேசிய நடிகை

- Advertisement -