ஜோக்கர் படத்திற்குப் பிறகு, ரம்யா பாண்டியனின் வாழ்க்கையே மாற்றிய அந்தப் புகைப்படம்!

2015-ல் வெளியான டம்மி பட்டாசு என்ற திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். அதன்பிறகு ஜோக்கர் திரைப்படத்தில் ஒரு கிராமத்துப் பெண்ணாக நடித்திருந்தார்.

இவர் ஜோக்கர் படத்தில் நடித்திருந்தாலும் அந்தப்படத்தில் ரம்யா பாண்டியன் பெருமளவு பேசப்படவில்லை. அதன் பிறகு அவர் நடத்திய கவர்ச்சி தூக்கலான போட்டோ ஷூட் தான் ரம்யா பாண்டியனின் சினிமா கேரியருக்குற அச்சாணியாக விளங்கியது.

மேலும் இந்த புகைப்படங்களில் ரம்யா பாண்டியன் தனது இடுப்பழகி காண்பித்து ரசிகர்களை வசியம் செய்தார். அதன்பிறகுதான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

அதையடுத்து கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். பின் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கு பெற்றார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரம்யா மிகவும் பிரபலம் அடைந்தார்.

ramya-pandian-cinemapettai
ramya-pandian-cinemapettai

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதையடுத்து அறிமுக இயக்குனர் அருள் அஜித்தின் இயக்கத்தில் இடும்பன்காரி என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.

விறுவிறுப்பான திரில்லர் நிறைந்த துப்பறியும் திரைப்படமாக இடும்பன்காரி திரைப்படம் உருவாகி வருகிறது என்று தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இத்திரைப்படத்தில் விஜய் டிவி நீயா நானா கோபிநாத், இயக்குனர் வேலுபிரபாகரன், ஜோதி மற்றும் அருள் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்