Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சம்பவம் செய்ய தயாராகும் தங்கலான்.. படப்பிடிப்புக்காக பறந்து வந்த ஹீரோயின்

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது தங்கலான் மூலம் விக்ரம் சிறப்பான சம்பவத்தை செய்யப் போகிறார் என்று ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தின் ரிலீசை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

vikram-pa ranjith

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் திரைப்படம் படு வேகமாக படமாக்கப்பட்டு வருகிறது. கோலார் தங்க சுரங்கத்தில் வாழ்ந்த மனிதர்களையும், இதுவரை சொல்லப்படாத பல உண்மைகளையும் மையமாகக் கொண்டதுதான் இப்படத்தின் கதை. அதனாலேயே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போது அதிகமாக இருக்கிறது.

இது எல்லாவற்றிற்கும் மேலாக இப்படத்திற்காக விக்ரம் தன்னையே உருமாற்றிக் கொண்டு நடித்து வருவதும் ஆவலை தூண்டி இருக்கிறது. கடைசியாக அவர் பெரிதும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்த கோப்ரா திரைப்படம் வசூலில் பலத்த அடி வாங்கியது. அதனாலேயே விக்ரம் இந்த படத்திற்காக கடின உழைப்பை கொடுத்து வருகிறார்.

Also read: கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடியா இருக்கே.. விக்ரமுக்கு தங்கலான் படத்தால் வந்த திடீர் சிக்கல்

எப்போதுமே தான் நடிக்கும் படங்களுக்காக அதிக ரிஸ்க் எடுத்து நடிக்கும் விக்ரம் இதில் இன்னும் அதிக ரிஸ்க் எடுத்து வருகிறாராம். அது மட்டுமல்லாமல் விக்ரம் உட்பட அனைவருக்கும் மேக்கப் போடுவதற்கு மட்டுமே பல மணி நேரம் ஆகுமாம். இருந்தாலும் பட குழுவினர் முழு ஒத்துழைப்போடு இப்படத்தில் நடித்து வருவதால் தங்கலான் விக்ரம் ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட்டாக இருக்கும் என்று இயக்குனர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

மாளவிகா மோகனன்

malavika-mohanan

malavika-mohanan

மேலும் படத்தின் நாயகிகளான பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோரும் நடிப்பில் பிச்சு உதறி இருக்கிறார்களாம். அந்த வகையில் இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மாளவிகா மோகனன் சென்னை வந்திருக்கிறார். ஏர்போர்ட்டில் இருந்து படுகூலாக அவர் வெளிவரும் போட்டோக்கள் இப்போது இணையதளத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

Also read: ரிலீசுக்கு முன்பே பல கோடி லாபம் பார்த்த விக்ரமின் தங்கலான்.. ஓடிடி உரிமத்தை பெற்ற பிரபல நிறுவனம்

அதில் அவர் ஜீன்ஸ் பேண்ட், கோட் அணிந்தபடி கையில் ஹேண்ட் பேக், கூலர்ஸ் என்று ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கிறார். இப்போது மலையாளம் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வரும் மாளவிகா தங்கலான் திரைப்படத்தை பெரிதும் நம்பி இருக்கிறாராம். ஏனென்றால் இப்படத்தில் அவருக்கு கனமான ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக கடும் பயிற்சி எடுத்து நடித்து வரும் மாளவிகா படப்பிடிப்பில் ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள் என்பதையும் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்.

ஸ்டைலாக வந்திறங்கிய ஹீரோயின்

malavika-mohanan-thangalan

malavika-mohanan-thangalan

அந்த வகையில் கடைசியாக இவர் நடித்த படங்களில் இவருடைய நடிப்பு சில விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அவற்றையெல்லாம் மறக்க வைக்கும் அளவுக்கு இப்படத்தில் அவருடைய நடிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது தங்கலான் மூலம் விக்ரம் சிறப்பான சம்பவத்தை செய்யப் போகிறார் என்று ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தின் ரிலீசை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Also read: சுட்டு போட்டாலும் உங்களுக்கு அது வரல என கூறிய பா ரஞ்சித்.. ஒரே நாள் இரவில் வியக்க வைத்த மாளவிகா மோகனன்

Continue Reading
To Top