நடிகை ஜெயலட்சுமி அதிரடி கைது.. சினேகன் கொடுத்த பரபரப்பு பேட்டி

Jayalakshmi – Snehan : பாடலாசிரியர் சினேகன் கடந்த 2015 ஆம் ஆண்டு மக்களுக்கு உதவுவதற்காக சினேகன் என்ற பவுண்டேஷனை தொடங்கி இருந்தார். இந்த அறக்கட்டளை மூலம் தான் சம்பாதித்த பணத்தையும், பவுண்டேஷன் மூலம் வரும் நிதியையும் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு நடிகை ஜெயலட்சுமி ஒரு அறக்கட்டளை ஆரம்பித்திருக்கிறார்.

ஆனால் சினேகன் மற்றும் ஜெயலட்சுமி இருவரின் அறக்கட்டளை ஒரே பெயரில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து சினேகன் தனது அறக்கட்டளையின் பெயரில் போலியாக கணக்கு தொடங்கி உள்ளதாக ஜெயலட்சுமி மீது வழக்கு கொடுத்திருந்தார்.

அதே போல் ஜெயலட்சுமி மீது வழக்கு தொடுதிருந்தார். இதில் சினேகன் மனுவை விசாரித்த அவர் மீது உள்ள குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை என வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜெயலட்சுமி வீட்டிற்கு திருமங்கலம் போலீசார் சென்று விசாரணை நடத்தி இருக்கின்றனர். அதன் பிறகு அவரது வீட்டில் இருந்து ஜெயலட்சுமியை போலீசார் அழைத்து சென்றனர்.

Also Read : சினேகன் கிட்ட இருக்கிற 1% நன்றி கூட இல்லாத ஜென்மங்கள்.. செல்பி குடும்பத்தை செஞ்சுவிட்ட கவிஞன்

அப்போது ஊடகங்கள் முன் ஜெயலட்சுமி என் மீது எந்த குற்றமும் இல்லை. சரியான ஆதாரம் இல்லாமல் என்னை கைது செய்து அழைத்து செல்கிறார்கள். நான் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்திருப்பதால் வேண்டுமென்று இவ்வாறு பொய்யான புகார்களை சுமத்துவதாக ஜெயலட்சுமி கூறி இருக்கிறார்.

ஜெயலட்சுமி கைதுக்கு பிறகு சினேகன் ஊடகங்களில் கூறியிருப்பது என்னவென்றால் என்னுடைய நிலைப்பாடு, ஒரே பெயரில் ஃபவுண்டேஷன் இருப்பது தான். இது குறித்து அவரிடம் பலமுறை பேசும் போதும் சரியான தீர்வு கிடைக்கவில்லை. பொது ஊடகங்களில் அவர்தான் ஆக்ரோஷமாக சில விஷயங்களை கூறியிருந்தார்.

இதற்கு மேலும் இப்படியே சென்றால் அரசியல் ரீதியான பிரச்சனையாக மாறிவிடும். இது இரு தனிப்பட்ட நபர்களின் பிரச்சனை என்பதால் நீதிமன்றத்தை நாடியதாக சினேகன் இப்போது ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்திருக்கிறார்.சினேகன் அருகில் அவரது வழக்கறிஞர் மற்றும் மனைவி கன்னிகா ஆகியோர் உடன் இருந்தனர்.

Also Read : மணிரத்தினம் படம் தான் வேணும்னு 3 படத்தை உதறித் தள்ளிய நடிகை.. ரொமான்டிக் பட இயக்குனரை நிராகரித்த ஹீரோயின்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்