ஆறாத ரணங்களுடன் வெளிவரும் சரஸ்வதி.. தமிழுக்கு விடாமல் ஆப்பு அடிக்கும் தம்பி!

Thamizhum saraswathium serial update saraswathi came Home from jail: விகடன் நிறுவனத்தின் சார்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் கடந்த எபிசோடை முடித்திருக்கும் நிலையில் இனி எல்லாம் சுகமே என்று  தமிழும் சரஸ்வதியும் ஒன்றாக இணைந்துள்ளனர்.

மேக்னா மற்றும் அவரது வளர்ப்புத் தாயாரின் கொலை வழக்கில், மேக்னாவின் மாமாவும் அவரது மகனும் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், நீதிபதி இவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனால் விடுதலையான சரஸ்வதியை தமிழ் ஆரத் தழுவி முத்தமிட்டு வரவேற்றார்.

சந்தோஷ பெருக்கில் இருந்த கோதை, நடேசன் மற்றும் நமச்சி மூவரும் சரஸ்வதியை வீட்டிற்கு அழைத்து சென்றனர். சிறைச்சாலையில் இருந்து வந்ததால் தலைமுழுகி வீட்டிற்குள் அழைத்துச் செல்லும் கோதை, சரஸ்வதிக்கு சாப்பிட என்ன வேண்டும் என்று கேட்கும் போது  தயிர் சாதத்தை  மட்டும் கேட்டு சிறையில் நடந்த கொடுமையை நினைவு கூறுகிறார் சரஸ்வதி.

Also read: விஜய் டிவி கழட்டிவிட்டதால் லோன் கட்ட முடியாமல் லோல்படும் நடிகை.. பாலாவை பார்த்து கத்துக்கோங்க

வார்டன் சரஸ்வதிக்கு  சாதத்தில் மிளகாய்த்தூளும் உப்பும் அதிகம் கொடுத்து  சாப்பிட சொல்லியதை  குடும்பத்தினர் முன் பகிர்ந்து அனைவரிடமும் சேர்ந்து கண்ணீர் வடித்தார் சரஸ்வதி.  சிறையில்  சரஸ்வதிக்கு நடந்த கொடுமையை பற்றி ஆளாளுக்கு விவாதிக்க இதிலும் அர்ஜுனின் பங்கு  இருக்கும் என சந்தேகப்படுகிறார் நமச்சி.அடுத்ததாக அர்ஜுனை சிக்க வைக்க தரமான சம்பவம் செய்ய காத்திருக்கிறார் நமச்சி.

உறங்கச் செல்லும் முன் சரஸ்வதி மற்றும் தமிழின் உரையாடல் எதார்த்த வாழ்க்கையில் “மக்கள் சந்தோஷத்தை தேடி ஓடிக் கொண்டிருக்கையில் நாம் வாழும் இந்த நிமிடங்களே!  இந்த வாழ்க்கையே சந்தோஷம் மற்றும் வசதியென” கூறுகிறார் சரஸ்வதி. சிறையில் இருட்டு அறையில் தான் அனுபவித்த கொடுமையையும், இப்போது இருக்கும் நிலையையும் தமிழுடன் எடுத்துக் சொல்லி மகிழ்கிறார் .

தூங்கிய போதும் வார்டன் தண்ணீர் ஊற்றி கொடுமைப்படுத்தியதை கனவில் கண்டு பதறி குடும்பத்தினர் அனைவரிடமும்  வருத்தத்துடன் அமர்ந்து பேசுகிறார் சரஸ்வதி.  இதற்கிடையே சரஸ்வதி வெளியே வந்தாச்சு என நிம்மதி பெருமூச்சுவிட விடாமல் இனிவரும் நாட்களில் கம்பெனியில் கார்த்தி செய்திருக்கும் வேலையால் தமிழ் மற்றும் கார்த்திக்கு மோதல் வெடிக்கும் என்ற  திருப்பங்களுடன் வெளிவர காத்திருக்கிறது தமிழும் சரஸ்வதியும்.

Also read: வெல்லம் தின்பது ஒருத்தன், விரல் சூப்புவது ஒருத்தனா?. கதிரை கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் ராஜி

Sharing Is Caring:

அதிகம் படித்தவை