அர்ஜூனுக்கு பல்பு! கலிவரதனுக்கு ஆப்பு! ஆனந்த கண்ணீரில் தமிழும் சரஸ்வதியும்

Thamizhum and Saraswathium serial update Saraswathi released from jail: விஜய் டிவியில் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அடுத்தடுத்து விறுவிறுப்பான திருப்பங்கள் நிகழ உள்ளன. மேக்னா மற்றும் அவரது வளர்ப்பு  தாய் இருவரையும் கொலை செய்த பழியை சுமந்து கொண்டு சரஸ்வதி சிறையில் வாடுகிறார்.

சரஸ்வதியை காப்பாற்ற போராடும் தமிழ் கொலை நடந்த இடத்தில் தடயம் ஏதும் கிடைத்து விடாதா என்ற ஆதங்கத்தில், பைத்தியக்காரன் போல் நடந்து கொண்டு எந்த ஒரு தடயமும் சாட்சியோ கிடைக்காமல், ”ஐயோ சரஸ்வதி உன்னை என்னால காப்பாற்ற முடியல” என்று கதறுகிறார்.

“இல்லாதவனுக்கு அந்த இறைவன் இறங்கி வருவான்” என்பது போல் ஒரு வயதான கண் தெரியாத முதியவர் திடீரென என்ட்ரி ஆக, அழுது கொண்டிருக்கும் தமிழுக்கு ஆறுதல் கூறுகிறார். அவரிடம் இங்கு நடந்த கொலை பற்றி விசாரிக்கிறார்கள் தமிழ் மற்றும் அவரது நண்பர் நமச்சி.

கொலை நடந்த அன்று வெளியான அத்தனை நிகழ்வுகளையும் கூறுவதை கேட்டுவிட்டு இதை கோர்ட்டில் சொல்ல முடியுமா என்று கெஞ்சுகிறார் தமிழ். கர்ப்பிணி பெண்ணுக்கு நான் வந்து கோர்ட்டில் சாட்சி சொல்றேன் என்று கூடவே வருகிறார் முதியவர்.

Also read: மென்மேலும் காயப்படுத்தும் கதிர்.. உண்மையை சொல்ல துணிந்த ராஜி

அர்ஜுன் ,கலிவரதன் மற்றும் அவரது சகாக்கள் சரஸ்வதிக்கு கண்டிப்பாக பெயில் கிடைக்காது, தண்டனை கிடைக்கும் என்ற இறுமார்ப்போடு வந்து நிற்க, தமிழ் முதியவரை அழைத்து சாட்சி சொல்ல வைக்கிறார். பார்வையற்ற முதியவரோ சரஸ்வதி குரலை கேட்டு இந்தப் பொண்ணு மேகனாவை காப்பாற்ற தான் வந்தார் என்றும் அதற்கு முன்பே இருவர் வந்து கொலை செய்து விட்டனர் என்றும் கூறினார். கலிவரதனின் குரலை கேட்டு இவர் தான் கொலை செய்ய சொன்னதாகவும் முதியவர் சாட்சி கூறினார்.

ஆடியோ சாட்சியை அடிப்படையாக வைத்து மட்டுமே தீர்ப்பளிக்க முடியாது எனவும் கண் தெரியவில்லையாததால் முதியவரின் சாட்சியையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது இந்த நீதிமன்றம். பின் கடைசி ஆயுதமாக முதியவரிடமிருந்த மேக்னாவின் தொலைபேசியில் உள்ள மேக்னாவின் வாக்குமூலம் மற்றும் வீடியோ காட்சியை நீதிபதியிடம் சமர்ப்பிக்கிறார் தமிழ். இறுதியில் குற்றவாளியான கலிவரதன் மற்றும் அவரது மகனுக்கு எதிராக தீர்ப்பு கூறி அவர்களை சிறை செல்ல உத்தரவிட்டது நீதிமன்றம்.

கோதை,நடேசன் மற்றும் நமச்சி சந்தோசத்தோடு நோக்க ஆனந்த கண்ணீரோடு, தமிழின் அன்பான முத்தத்தின் அரவணைப்போடு ஒன்றர கலந்து உருகுகிறாள் சரஸ்வதி.

Also read: பிள்ளை இல்லாத வீட்டில் துள்ளி விளையாடும் விஜயா.. சைடு கேப்பில் ரொமான்ஸில் புகுந்த முத்துவின் அப்பா

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்