வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

மென்மேலும் காயப்படுத்தும் கதிர்.. உண்மையை சொல்ல துணிந்த ராஜி

Pandian Stores 2 serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிர் ராஜியின் திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாத பாண்டியன், சொந்த வீட்டில் தங்காமல் கடையில் உறங்குகிறார். இதை தாங்க முடியாத கோமதி அவரை எப்படியோ சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

வந்ததும் கதிரிடம், ராஜி வீட்டாரின் பணம் நகையை திரும்பி கொடுத்து விட சொல்கிறார். வெல்லம் தின்பது ஒருத்தன், விரல் சூப்புவது ஒருத்தன்! எடுக்காத பணத்தை திரும்பிக் கொடுக்க சொன்னா எப்படி கொடுக்கிறது என்று கதிர் கோபத்தின் உச்சத்துக்கே சென்று பாண்டியனை எடுத்தெறிந்து பேசுகிறார்.

‘அந்தப் பணம் ஏற்கனவே செலவாகிவிட்டது. அது ஒன்றும் உங்களுடைய பணம் இல்லையே! என்னுடைய விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். என்னுடைய வாழ்க்கையில் என்ன பண்ண வேண்டும் என்று எனக்கு தெரியும். நீங்க பேசாமல் இருந்தால் போதும்’ என எல்லோரின் முன்பும் பாண்டியனிடம் கோபமாக பேசி மேலும் அவரைக் காயப்படுத்துகிறார் கதிர்.

Also read: அப்பாவை மாதிரி இனி ஒரு விஏஓ கூட சாகக்கூடாதுன்னு நீதிபதியாகும் மார்சல்.. சரித்திரத்தை புரட்டிப்போட்ட நிஜக்கதை

பாண்டியன் எடுத்த விபரீத முடிவு

இதைக் கேட்டதும் மனம் உடைந்து போன பாண்டியன், ‘இனிமேல் அவன் எனக்கு பிள்ளையும் இல்லை நான் அவனுக்கு அப்பனும் இல்லை’ என்ற விபரீத முடிவை எடுக்கிறார். இந்த அளவிற்கு பாண்டியனின் குடும்பம் கஷ்டப்படுவதற்கு ராஜி தான் காரணம். அவர் செய்த தவறால் இப்போது கதிர் குற்றவாளியாக மாறிவிட்டார்.

இனிமேலும் அமைதியாக இருக்கக் கூடாது என்று ராஜி எல்லா உண்மையும் பாண்டியன் இடம் சொல்ல கிளம்பும் ப்ரோமோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகிறது. ஆனால் எப்படியும் மீனா மற்றும் கோமதி இருவரும் ராஜியை சொல்ல விடாமல் தடுத்து விடுவார்கள். இதை வைத்தே இன்னும் ஆறு மாதத்திற்கு இந்த சீரியலை ஜவ்வு போல் இழுப்பதுதான் சீரியல் இயக்குனரின் பிளான்.

Also read: கீ கொடுத்த பொம்மை போல் தர்ஷினி தந்த வாக்குமூலம்.. பின்னால் இருக்கும் மர்மம், விறுவிறுப்பாகும் எதிர்நீச்சல்

- Advertisement -

Trending News