3 வயது அதிகமா? பரவாயில்ல.. வீட்டுக்கு வந்த மகாலட்சுமிக்கு தம்பி ராமையா போட்ட கண்டிஷன்

Aishwarya Arjun – Umapathy: நடிகர்கள் அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா இருவரும் சம்பந்திகள் ஆனது தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஐஸ்வர்யா அர்ஜூன், தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலிக்கிறார், இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா அர்ஜூன் மற்றும் உமாபதி இருவருக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. இந்த நிச்சயதார்த்த நிகழ்வுகள் அர்ஜுன் விருகம்பாக்கத்தில் கட்டி இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் தான் நடைபெற்றது. இதில் சினிமா பிரபலங்கள் யாரும் பங்கேற்கவில்லை. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நடைபெற்று இருக்கிறது.

நடிகர் அர்ஜுன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் உமாபதியும் ஒரு போட்டியாளர். அப்போது ஐஸ்வர்யா அர்ஜுன் அந்த படப்பிடிப்பு தளத்திற்கு அடிக்கடி சென்று வருவாராம். இதனால் இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறி இருக்கிறது.

Also Read:அர்ஜுனுக்கு சம்பந்தியாகும் பிரபல காமெடி நடிகர்.. விரைவில் ஐஸ்வர்யாவுக்கு திருமணம்

அர்ஜுனுக்கு இந்த விஷயம் தெரிந்ததும், உமாபதியின் கேரக்டர் ஏற்கனவே தெரியும் என்பதால், உடனே ஓகே சொல்லி விட்டாராம். ஆனால் தம்பி ராமையா ஒரு கண்டிஷன் உடன் தான் இந்த திருமணத்திற்கு ஓகே சொல்லி இருக்கிறார். ஐஸ்வர்யா அர்ஜுன் நடிகர் விஷால் நடித்த பட்டத்து யானை படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அதனால் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க கூடாது என்று தம்பி ராமையா சொல்லி இருக்கிறாராம்.

மேலும் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி இருவருக்கிடையே மூன்று வயது வித்தியாசம் இருக்கிறதாம். உமாபதிக்கு 28 வயது, ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு 31 வயது என பிரபல சினிமா விமர்சகர் வித்தகன் சொல்லி இருக்கிறார். மேலும் தம்பி ராமையா போட்ட கண்டிஷனையும் வித்தகன் தான் தன்னுடைய யூடியூப் இன்டர்வியூவில் சொல்லி இருக்கிறார்.

தம்பி ராமையா சினிமாவில் இருந்தும் வீட்டிற்கு வரும் மருமகளுக்கு இப்படி ஒரு கண்டிஷன் போட்டிருப்பது எல்லோருக்கும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. பல நடிகைகள் இப்படி ஒரு கண்டிஷன் உடன் தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் கல்யாணத்திற்கு பிறகு அது எல்லாம் தலைகீழாக மாறிவிடுகிறது. ஐஸ்வர்யா அர்ஜுன் மாமனார் போட்ட கண்டிஷன் படி நடந்து கொள்கிறாரா என இனி தான் தெரியும்.

Also Read:அஜித்தின் மச்சானால் பெருமூச்சு விட்ட தம்பி ராமையா.. புளியங்கொம்பை பிடித்த மகன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்