பிக்பாஸில் 98 நாட்களுக்கு தாமரை வாங்கிய சம்பளம்.. பொட்டியை தூக்காமலே நல்ல வசூல் தான்

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக முடிவு பெற உள்ளது. இந்த சீசனில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக இருந்தவர் தாமரைச்செல்வி.

அதிக அளவில் பிரபலம் இல்லாத மேடை நாடகக் கலைஞரான தாமரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மிகவும் பிரபலமடைந்தார். ஆரம்பத்தில் விளையாட்டு பற்றிய புரிதல் இல்லாமல் மிகவும் வெகுளித்தனமாக இருந்த அவர் போகப்போக கடுமையான போட்டியாளராக மாறினார்.

இதனால் பிக் பாஸ் பைனல் போட்டிக்கு தாமரை நிச்சயம் செல்வார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அவர் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பிக்பாஸ் வீட்டில் மிகவும் தன்னம்பிக்கையுடன் விளையாடிய ஒரு போட்டியாளர் என்றால் அது தாமரை மட்டும்தான்.

ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் 12 லட்ச ரூபாய் பண பெட்டி வைக்கப்பட்டது. அதை சிபி எடுத்துக்கொண்டு வெளியேறுமுன் தாமரையிடம் உனக்கு இந்த பணம் தேவைப்படுமா என்று பலமுறை கேட்டார். ஆனால் தாமரை எனக்கு இந்த பணம் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

மேலும் நான் நேர்மையுடன் விளையாட்டை விளையாடி நிச்சயம் இறுதிப்போட்டிக்குள் செல்வேன் என்று கூறினார். எவ்வளவு கடன் இருந்தாலும் தாமரை இவ்வளவு தன்னம்பிக்கையுடன் கூறியது பலரின் பாராட்டையும் பெற்றது.

தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கும் தாமரைக்கு கிடைத்துள்ள சம்பளம் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது தாமரைக்கு பிக் பாஸ் வீட்டில் ஒரு வாரத்திற்கு 70 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டுள்ளது. தாமரை பிக் பாஸ் வீட்டில் 98 நாட்கள் அதாவது 14 வாரங்கள் இருந்துள்ளார்.

இந்த 14 வாரங்களுக்கும் சேர்த்து அவர் சம்பாதித்த மொத்த தொகை 9,80,000 மட்டுமே. இதில் 30% வருமான வரி பிடித்து விடுவார்கள். மீதமிருக்கும் பணத்தை வைத்து பார்க்கும் பொழுது பண பெட்டியில் இருந்த தன் 12 லட்சத்தை விட மிகவும் குறைவான சம்பளமே தாமரைக்கு கிடைத்துள்ளது.

இதனால் தாமரையின் ரசிகர்கள் அனைவரும் தாமரை பணப்பெட்டியை எடுத்திருக்கலாம் என்று ஆதங்கத்துடன் கூறி வருகின்றனர். இருப்பினும் பணத்தின் மீது ஆசை இல்லாத தாமரைக்கு இந்த சம்பள பணமே நல்ல தொகை தான். மேலும் விளையாட்டை பாதியில் முடிக்காமல் மன உறுதியுடன் இறுதிவரை போராடிய தாமரையை பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்