செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

பிக் பாஸ் சீசன்5 முடிச்ச கையோடு.. விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிக்கு புக்கான தாமரை

சின்னத்திரை ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்ற ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் குறித்த ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது, எனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகள் உடன் சமையலில் திறமை வாய்ந்த சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொள்வார்கள்.

ஏற்கனவே வெளியான ப்ரோம வில் கோமாளிகள் யார் யார் என்று தெரியவந்துள்ள நிலையில், போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த விபரமும் இணையத்தில் கசிந்துள்ளது. குக் வித் கோமாளி சீசன் 3ல் அர்ச்சனா, ஊர்வசி, பிக்பாஸ் விஜயலட்சுமி இவர்களது பெயரைத் தொடர்ந்து தற்போது தாமரைச் செல்வியின் பெயரும் அடிபடுகிறது.

ஏனென்றால் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் டாப் 6 போட்டியாளராக மக்கள் மனதை கவர்ந்த தாமரைச்செல்வி, நேற்றைய நிகழ்ச்சியில் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் ரசிகர்களின் மனதில் தாமரைச்செல்வி தனி இடம் பிடித்து விட்டார்.

அத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்த சக போட்டியாளர்களுக்கு தாமரைச்செல்வி நன்றாக சமைத்து கொடுத்து, அவர்களின் பாராட்டையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் சமையலில் கெட்டிக்காரரான தாமரைச்செல்வி குக் வித் கோமாளி சீசன் 3ல் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது. மக்களும் அதை தான் எதிர்பார்க்கின்றன.

ஏனென்றால் சோசியல் மீடியாவில் தாமரைச்செல்வி குக் வித் கோமாளி சீசன் 3ல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே தற்போது இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியை முடித்துவிட்டு கையோடு குக் வித் கோமாளி சீசன்3 பொங்கலுக்குப் பிறகு  ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகையால் தாமரைச்செல்வி நிச்சயம் குக் வித் கோமாளி சீசன் 3ல் கலந்து கொள்வார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அவ்வாறு கலந்து கொண்டால், பிக்பாஸில் விட்டதை தாமரைச்செல்வி குக் வித் கோமாளியில் பிடித்துவிடுவார் என்றும் சிலர் சோஷியல் மீடியாவில் கமெண்ட் அடிக்கின்றனர்.

- Advertisement -

Trending News