கடன் நெருக்கடியிலும் பணப்பெட்டியை எடுக்காத போட்டியாளர்.. நீங்க ரொம்ப கிரேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக இருந்தவர் மேடை நாடகக் கலைஞர் தாமரைச்செல்வி. அவர் இறுதிப்போட்டி வரை நிச்சயம் செல்வார் என்று ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அவர்களை ஏமாற்றும் விதமாக தாமரைச்செல்வி கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது தாமரையின் ரசிகர்கள் உட்பட பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் தாமரை பற்றி ராஜுவிடம், பிரியங்கா பேசினார். கிராமத்து பின்னணியில் இருந்து வந்த ஒரு பெண் எந்த பிரபலமும் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த அளவுக்கு நீடித்தது தாமரைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று அவர் கூறினார்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் வைத்திருந்த பணப் பெட்டியை சிபி எடுத்துக் கொண்டு வெளியேறும் முன் தாமரையிடம் உனக்கு இது அதிகமாக தேவைப்படும் அதனால் நீ எடுத்துக் கொள்கிறாயா என்று கேட்டார். ஆனால் அதற்கு தாமரை எனக்கு இந்தப் பணம் தேவைப்படாது என்று கூறி மறுத்துவிட்டார்.

உண்மையில் தாமரைக்கு நிறைய கடன் பிரச்சினைகள் இருக்கிறது என்பதை அவர் நிகழ்ச்சியில் இருக்கும் பொழுது சொல்லிக்கொண்டே இருப்பார். ஒருமுறை பிரியங்காவிடம் பிக்பாஸ் மூலம் கிடைக்கும் சம்பளத்தில் என் பாதி கடனை அடைத்து விடுவேன்.

மீதமிருக்கும் கடனை நான் வெளியில் சென்று சம்பாதித்து எப்படியாவது அடைத்து விடுவேன் என்று கூறினார் இதன் மூலம் தாமரைக்கு மிகப்பெரிய கடன் நெருக்கடி இருக்கிறது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

இவ்வளவு பண நெருக்கடி இருக்கும் போதும் தாமரை பிக் பாஸ் வீட்டில் வைக்கப்பட்ட பணப் பெட்டியை எடுக்க முன்வரவில்லை. மாறாக நான் விளையாடுவதற்கு தான் வந்தேன் நேர்மையாக விளையாடி விட்டு செல்கிறேன் என்று இருந்த அவருடைய அந்த தன்மானம் தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியின் இறுதி வரை தன்னம்பிக்கையுடன் விளையாடி அனைவருக்கும் ஒரு கடுமையான போட்டியாளராக இருந்த தாமரையின் இந்த குணம் அவரை ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமரவைத்து உள்ளது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை