பிரியங்காவை பார்த்தவுடன் ஆக்ரோஷமாக மாறிய போட்டியாளர்.. ரெட் கார்டு கொடுப்பாரா ஆண்டவர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று டிக்கெட் டூ பினாலே டாஸ்க் ஒன்று போட்டியாளர்களுக்கு தரப்பட்டது. அதில் இதுவரை எந்த சீஸனிலும் இல்லாத அளவுக்கு போட்டியாளர்கள் தர லோக்கலாக இறங்கி சண்டையிட்டனர்.

இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே பிரியங்கா மற்றும் தாமரை இருவருக்கும் ஒத்துப் போகாமல் இருந்தது. இதனால் எந்த டாஸ்க் கொடுத்தாலும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது சண்டையில் முடியும்.

ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் அது கொஞ்சம் அதிகமாகி கைகலப்பாக மாறியது. போட்டியாளர்கள் அனைவருக்கும் முட்டை ஒன்று கொடுக்கப்பட்டது. அதை மற்றவர்கள் உடைக்காமல் பாதுகாக்க வேண்டும். இறுதியில் யாருடைய முட்டை உடையாமல் அதிகமாக இருக்கிறதோ அவர்கள் அடுத்த போட்டிக்கு செல்வார்கள்.

இந்த விதி முறையின்படி போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் முட்டைகளை பாதுகாப்பாக வைத்து விளையாடி வந்தனர். ஒரு கட்டத்தில் அனைவரும் அடுத்தவர்களுடைய முட்டையை உடைத்து தங்கள் முட்டையை பாதுகாத்தனர். அப்படி உடைக்கும் போது தாமரை மற்றும் பிரியங்கா இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதில் தாமரை, பிரியங்காவிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது தாமரை, பிரியங்காவின் அருகில் நெருங்கி நெருங்கி வந்த காரணத்தால் பிரியங்கா, தாமரையின் தோள் மீது கை வைத்து லேசாகத் தள்ளினார்.

ஆனால் அதற்கு தாமரையோ மிகவும் முரட்டுத்தனமாக பிரியங்காவின் மேல் கை வைத்து தள்ளி விட்டார். இதை எதிர்பார்க்காத பிரியங்கா சற்று சுதாரித்து ஏன் இப்படி செய்தாய் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் தாமரை, பிரியங்காவை வாய ஒடச்சிடுவேன், பொம்பளையா நீ என்பது போன்ற வார்த்தைகளை கூறினார்.

இது அங்கிருக்கும் போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. மற்ற போட்டியாளர்களிடம் சாதுவாக இருக்கும் தாமரை, பிரியங்காவுடன் மட்டும் இவ்வளவு ஆக்ரோஷமாக நடப்பது ஏன் என்று அவருக்கு எதிராக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து இதுபோன்ற மோசமான வார்த்தைகளை பேசும் தாமரைக்கு  கொடுத்து வெளியே அனுப்புங்கள் என்று சமூக தளங்களில் அனைவரும் தாமரைக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை