ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

என்னை விட அஜித்தை ரொம்ப பிடிக்குமா ? மீனாவிடம் விஜய் கேட்ட கேள்விக்கு என்ன சொன்னாங்க தெரியுமா?

நடிகை மீனா 90களில் பயங்கர பிசியாக இருந்த ஹீரோயின். தென்னிந்திய படங்களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். பிசியான கால்ஷீட்டுகளால் எத்தனையோ ஹிட் படங்களை கூட மீனாவால் நடிக்க முடியாமல் போனது. தான் நடித்த படங்களை தானே பார்க்க முடியாத அளவுக்கு பிசியாக இருந்ததாக மீனா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட சொல்லி இருந்தார்.

அப்போதைய தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேருடனும் சேர்ந்து நடித்துவிட்டார் மீனா. தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் அவருடனே ஜோடி சேர்ந்தும் நடித்தார். ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சரத்குமார், அஜித் என அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் கைகோர்த்த மீனா தளபதி விஜய் உடன் மட்டும் நடிக்கவில்லை.

Also Read:முருகதாஸிடம் வாக்கு கொடுத்த பின் கைவிட்ட தளபதி.. அப்படி பேசியதால் சம்பாதித்த மொத்த வெறுப்பு

நடிகர் விஜய்யும் அப்போதைய முன்னணி ஹீரோயின்கள் அத்தனை பேருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார். நடிகை மீனாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது விஜய்க்கு மிகப்பெரிய ஆசையாக இருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பு அமையவே இல்லை. பட வாய்ப்புகள் அமைந்தும் கால்ஷீட் இல்லாத காரணத்தால் மீனாவாலும் விஜய் படங்களில் கமிட்டாகவில்லை.

அதே நேரத்தில் மீனா நடிகர் அஜித்துடன் ஆனந்த பூங்காற்றே எனும் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. மீனாவுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட தளபதி விஜய் அது நடக்காததால் தன்னுடைய ஷாஜகான் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வைத்திருப்பார். இந்த பாடலும் சூப்பர் ஹிட் ஆனது.

Also Read:துப்பாக்கி படத்தில் மறுக்கப்பட்ட வாய்ப்பு.. 11 வருடம் கழித்து தளபதி 67ல் விட்டதைப் பிடித்த நடிகை

அந்த படப்பிடிப்பின் போது விஜய் நடிகை மீனாவிடம் நானும் உங்களோடு நடிக்க ரொம்ப முயற்சி செய்தேன். ஆனால் நீங்கள் என் படத்திற்கு ஓகே சொல்லவே இல்லை. அஜித்துடன் மட்டும் படம் பண்ணியிருக்கிறீர்கள். அதற்கு காரணம் உங்களுக்கு நடிகர் அஜித்தை தான் ரொம்ப பிடிக்கும், அதனால் தான் அவர் படங்களில் மட்டும் நடித்திருக்கிறீர்கள் என்று கேட்டாராம்.

அந்த கேள்விக்கு உண்மையாகவே மீனா என்ன சொல்வது தெரியாமல் அந்த சமயத்தில் நான் ரொம்ப பிஸியாக இருந்தேன் விஜய் அதனால் தான் உங்கள் படங்களில் என்னால் நடிக்க முடியவில்லை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆனால் எனக்கு அஜித் ரொம்ப பிடிக்கும் என்பது உண்மைதான் என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை மீனாவே பகிர்ந்திருக்கிறார்.

Also Read:பினாமியை வைத்து சூப்பர் ஸ்டாரையே ஓரம் கட்டும் தந்திரம்.. விஜய் நடத்தும் அண்டர் கிரவுண்ட் பிசினஸ்

- Advertisement -

Trending News