தளபதி 67 பூஜை போட்டு ஒரு நாள்தான் ஆகுது.. லோகேஷன் சம்பவம் லோடிங், அதுக்குள்ள பல நூறு கோடி வியாபாரமா?

விக்ரம் படத்தின் மூலம் மாபெரும் வெற்றி கண்ட லோகேஷ் கனகராஜ், இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு விஜய் உடன் மாஸ்டர் படத்தில் இணைந்ததை தொடர்ந்து 2-வது முறையாக இவர்களது கூட்டணி தளபதி 67 படத்தில் இணைகிறது.

தற்போது விஜய்யின் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கும் வாரிசு படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்த நிலையில், தற்போது தளபதி 67 படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது.

Also Read: வாரிசு படத்திற்கு கும்பிடு போட்ட விஜய்.. தடபுடலாக ஆரம்பமாகும் தளபதி 67

இந்த நிகழ்வு ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள விநாயகர் கோவிலில் நடைபெற்றிருக்கிறது. இந்த நிகழ்வில் போன் அனுமதிக்காததால் படத்தின் தயாரிப்பு தரப்பில்ல் இருந்து மட்டுமே தளபதி 67 பட பூஜையின் புகைப்படங்கள் வெளியிடப்படும் என தெரிகிறது.

ஏற்கனவே விக்ரம் திரைப்படத்தின் அறிவிப்பு டீசர் பலரையும் கவர்ந்த நிலையில் தளபதி 67 படத்தின் அறிவிப்பு டீசர் அதைவிட மாசாக உருவாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து படத்தின் முதல் ஷெட்யூல் சென்னையில் 15 நாட்களும் பிறகு காஷ்மீரிலும் நடைபெற இருக்கிறது.

Also Read: விக்ரம் படத்தை மிஞ்சும் பிரமோஷன்.. விரைவில் வெளிவர உள்ள தளபதி 67 டீசர்

மேலும் இந்த படத்தில் அறிவிப்பு டீசர் படப்பிடிப்புக்கான பிரசாந்த் லேப்பில் இரண்டு செட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று ரெட் டோனில் இருக்கும்படடி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறதாம். இங்கு நாளை முதல் 4 நாட்களுக்கு தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

ஆகையால் படத்தின் ரிலீஸுக்கு முன்பே 500 கோடிக்கு மேல் பிசினஸ் ஆன தளபதி 67 படத்தில், மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்-லோகேஷ் கனகராஜ்-லலித் கூட்டணி இணைந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற விட்டிருக்கிறது.

Also Read: வாரிசு மட்டுமல்ல தளபதி 67 உடன் போட்டி போடவும் நாங்கள் ரெடி.. சுத்தி அடிக்கும் துணிவு படக்குழு

Next Story

- Advertisement -