மகனை நினைத்து ஜோக்கர் ஆக மாறிய டெரர் பாண்டியன்.. வச்சு செய்யப்போகும் மருமகள்கள்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், பாண்டியன் கொஞ்சம் டெரராகவும், ரொம்ப ஸ்ட்ரீட்டா மகன்களிடம் நடந்து கொள்ளும் அப்பாவாக இருந்தார்.

ஆனால் தற்போது மூத்த மகனின் திருமணம் தடையாகி வருவதால் ரொம்பவே மன வருத்தத்தில் புலம்பித் தவிக்கிறார். அந்த வகையில் வீட்டில் இருக்கும் அனைவரையும் கூப்பிட்டு நான் ஒரு முடிவு பண்ணி இருக்கிறேன் என்று கூறுகிறார்.

இவர் என்ன சொல்லப் போகிறார் என்று இவருடைய வாயவே பார்த்துக் கொண்டு மொத்த குடும்பமும் நிற்கிறார்கள். அந்த வகையில் பாண்டியன் எந்த ஒரு விஷயமும் என்னிடம் கேட்காமல் நீங்களே முடிவு பண்ணி பெரிய மனுசனாக வருகிறீர்கள்.

இப்பொழுது நான் ஒரு முடிவெடுத்து இருக்கிறேன். இதையாவது என் இஷ்டப்படி பண்ண விடுங்கள் என்று புரியாத புதிராகவே பேசுகிறார்.

இவர் அப்படி என்னதான் சொல்லப் போகிறார் என்று அனைவரும் என்னன்னு சொல்லுங்கள் என கேட்கிறார்கள். உடனே பாண்டியன் 50 நாட்களுக்குள் என் மூத்த மகனுக்கு நான் கல்யாணத்தை பண்ணி வைத்தே ஆக வேண்டும்.

அதுவரை நான் இப்படித்தான் இருக்கணும் என்று ஒரு முடிவு பண்ணி இருக்கிறேன் என பொடி வைத்தே பேசுகிறார். என்னதான் சொல்ல வரீங்க சொல்லுங்களே சீக்கிரம் என்று மச்சான் கேட்கிறார். இன்னொரு பக்கம் கோமதி, டெரராக ஏதாவது ஒரு வில்லங்கத்தை இழுத்து விடுவாரோ என்ற பயத்தில் நிற்கிறார்.

ஆனால் அதெல்லாம் ஒன்னும் இல்லை என்பதற்கு ஏற்ப பாண்டியன் மொக்க காமெடி பண்ணி விட்டார். அதாவது என் மகன் கல்யாணம் முடியிற வரை நான் இனி காலில் செருப்பை போட மாட்டேன் என்று சொல்லிவிட்டார். இதை கேட்டதும் மீனாவின் மைண்ட் வாய்ஸ், இதுக்கா இவ்ளோ அலப்பறை.

மகன் தாலி கட்டுவதற்கும், இவர் காலில் செருப்பு போடாமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம். ஏன் லூசுத்தனமா இப்படி கூப்பிட்டு வந்து மொக்க பண்ணுகிறார் என்று மீனாவின் நக்கலான சிரிப்பிலும் ரியாக்ஷனிலும் நல்லாவே தெரிந்தது. அதிலும் இவர் சொன்னதை கேட்டு மகன்கள் அப்பா அந்த மாதிரி ஒரு விபரீதம் வேண்டாம்.

அதுவும் இனி வெயில் காலம் ஆரம்பம் ஆகிவிட்டது. அதனால் காலில் செருப்பு இல்லாமல் இருக்கவே முடியாது என்று ஒவ்வொருவரும் கெஞ்சும் போது இது என்ன குடும்பமா இல்ல வேற ஏதாவது என்று யோசிக்கும் அளவிற்கு மொக்கையாக முடிந்து விட்டது.

இதனைத் தொடர்ந்து பாண்டியனின் முடிவை நினைத்து வீட்டிற்கு வந்த மீனா மற்றும் ராஜி நினைத்து நினைத்து சிரித்துக் கொள்கிறார்கள். அதிலும் மாமனார் இப்படி ஒரு ஜோக்கராக இருக்கிறார் என்று நல்ல வச்சு செய்கிறார்கள்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை