தேசிய விருது இயக்குனரை மதிக்காத டாடா நிறுவனம்.. சுதா கொங்கராவை நிராகரித்ததின் பின்னணி

சுதா கொங்கரா தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். எப்படியாவது இவர் படத்தில் நடித்துவிட வேண்டும் என்று எல்லா நடிகர்களும் ஆசைப்படுகின்றனர். ஆனால் அவரோ ரத்தன் டாட்டா பயோபிக் படத்தை எடுக்க விரும்பினார்.

ஆனால் திடீரென்று தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த மாதிரி ரத்தன் டாட்டா வாழ்க்கை வரலாறு எடுக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டு விட்டார். இதற்குப் பின்னால் பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. இவர் முதலில் டாட்டா பயோபிக் படத்தை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்.

Also Read: சுதா கொங்கராவின் அடுத்த ஹீரோ இந்த முன்னணி நடிகர் தானாம்.. கொல மாஸ் கூட்டணி!

ஆனால் இப்பொழுது டாட்டா குழுவிற்கே இவரை வைத்து எடுக்கும் எண்ணம் இல்லை. அவர்களுக்கு ஏனோ இவர் மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் எதிர்பார்க்கும் இயக்குனரே வேறு அவர்கள் இந்த படத்தை எடுப்பதற்காக இரண்டு பாலிவுட் இயக்குனர்களை ஒப்பந்தம் செய்து விட்டனர்.

ரத்தன் டாட்டா வாழ்வில் அவ்வளவு சுவாரசியம் இருக்கிறதாம் இதை மிகவும் அறிந்தவர்கள் மற்றும் நன்கு தெரிந்தவர்களாலையே எடுக்க முடியுமாம் அதனால் தான் அவர்கள் பிரபல பாலிவுட் இயக்குனர்கள் இருவரை இதற்காக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

Also Read: மீண்டும் பயோபிக் கதையை கையிலெடுத்த சுதா கொங்கரா.. ரத்தன் டாட்டாவாக மாறப்போகும் நடிகர்

சல்மான்கானை வைத்து பஜ்ரங்கி பைஜான், மற்றும் எண்பத்தி மூன்று ஆகிய படங்களை எடுத்த கபீர் கான், ரத்தன் டாட்டாவின் லிஸ்டில் வருகிறார் அவரைத் தொடர்ந்து பாலிவுட்டை சேர்ந்த வேறு ஒரு முக்கியமான இயக்குனரும் ரத்தன் டாட்டாவின் பயோபிக் படத்தை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார்

ஏற்கனவே தோனியின் வாழ்க்கை வரலாறு எடுத்த இயக்குனர் நீரஜ் பாண்டே. இவரும் இந்த படத்தை எடுக்கும் இயக்குனர் லிஸ்டில் இருக்கிறாராம். இவர் ஏற்கனவே தோனி வாழ்க்கை வரலாறு படத்தை எடுத்ததால் இவருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

Also Read: என்னுடைய வெற்றி ரகசியம் இதுதான்.. முதல்முறையாக பகிர்ந்துகொண்ட சூரரைப் போற்று சுதா கொங்கரா

Next Story

- Advertisement -