இயக்குனர்களை திருமணம் செய்த 7 நடிகைகள்.. 2 வருடங்களுக்குள் 2 ஜோடி விவாகரத்து

தமிழ் சினிமாவில் தன்னுடன் நடிக்கும் சக நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் சில நடிகைகள் தங்களின் படங்களை இயக்கிய இயக்குனர்களை காதலித்து, திருமணம் செய்துகொண்டுள்ளனர். அவ்வாறு இயக்குனர்களை திருமணம் செய்து கொண்ட ஏழு நடிகைகளை பார்க்கலாம்.t

மணிரத்னம், சுஹாசினி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்தவர் நடிகை சுஹாசினி. பிரபல இயக்குநர் மணிரத்தினத்தை காதலித்து 1988 இல் சுஹாசினி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நந்தன் என்ற மகன் உள்ளார்.

சுந்தர் சி, குஷ்பூ: தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. இயக்குனர் சுந்தர் சி, குஷ்பு இருவரும் ஐந்து வருடங்களாக காதலித்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

செல்வமணி, ரோஜா: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் ரோஜா. இயக்குனர் செல்வமணி மற்றும் ரோஜா இருவரும் 13 வருடம் காதலித்து பல போராட்டங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கிருஷ்ணா லோஹித் என்ற மகனும் அன்சுமாலிகா என்ற மகளும் உள்ளனர்.

ராஜகுமாரன், தேவயானி: தமிழ் சினிமாவில் கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் தேவயானி. இயக்குனர் ராஜகுமாரன் மற்றும் தேவயானி இருவரும் காதலித்து வந்தனர். தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்புக்கு பிறகு இவர்கள் இருவரும் 2001 ஆம் ஆண்டு திருத்தணியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு
இனியா, பிரியங்கா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

செல்வராகவன், சோனியா அகர்வால்: மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்தவர் நடிகை சோனியா அகர்வால். செல்வராகவன் தன்னுடைய காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு சோனியா அகர்வாலை அறிமுகம் செய்தார். இதன் மூலம் காதலித்த வந்த இருவரும் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010 பிரிந்துவிட்டனர்.

ஏஎல் விஜய், அமலாபால்: தெய்வத்திருமகள் படத்தில் நடித்ததன் மூலம் நடிகை அமலா பாலுக்கும், இயக்குனர் ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்துள்ளது. இவர்களது திருமணம் 2014 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக 2017 இவர்களுக்கு விவாகரத்தானது.

அட்லி, பிரியா: சின்னத்திரையிலிருந்து சிங்கம் படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகை பிரியா. இவரும், இயக்குனர் அட்லியும் கல்லூரிப் படிப்பில் இருந்து காதலித்து வந்துள்ளனர். அட்லி, ப்ரியா இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

- Advertisement -