லிங்குசாமியை அடுத்து விழி பிதுங்கி நிற்கும் வெங்கட்பிரபு.. 100 கோடி வசூல் எடுத்தும் இதான் நிலைமை

தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குனர்கள் வெற்றி அடைந்தாலும் சரி தோல்வி அடைந்தாலும் சரி தற்போது உள்ள சூழலில் தெலுங்கு திரையுலகத்திற்கு அனைவரும் சென்று விட்டனர் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்.

லிங்குசாமி, ஏ ஆர் முருகதாஸ், வெங்கட் பிரபு, ஹரி, வெற்றிமாறன், இயக்குனர் ஷங்கர் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். லிங்குசாமி இயக்கத்தில் வெளியான வாரியர் திரைப்படம் தெலுங்கிலும் தமிழிலும் தோல்வியைத் தழுவியது. அடுத்து ஷங்கர் இயக்கும் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த சூழலில் வெங்கட் பிரபு அவர்கள் மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

Also Read: வெங்கட் பிரபுவை 4 திசையிலும் ஆட்டிப்படைக்கும் கெட்ட நேரம்

அதற்கு அடுத்து தமிழில் யாருக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று பரபரப்பாக இருந்தபொழுது அவர் தெலுங்கு பக்கம் சென்று விட்டார். நாகார்ஜுனன் மகன் நாக சைதன்யா வைத்து தெலுங்கில் வெங்கட்பிரபு இயக்க இசை இளையராஜா படத்தில் முக்கிய வில்லனாக அருண் விஜய் போன்றோருடன் பட பூஜை தொடங்கியது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய நிலையிலேயே அருண் விஜய் விலகிவிட்டார் பின்னர் படம் நிறுத்தப்பட்டது.

இந்த படத்தின் தயாரிப்பாளர் வாரியர் திரைப்படத்தின் தோல்வி மற்றும் நாக சைதன்யா ராசியில்லாத நடிகராகவும் கருதப்படுவதால் படத்திலிருந்து விலகி விட்டார். அடுத்து வெங்கட்பிரபு சத்யஜோதி பிலிம்ஸில் சுதீப் நடிக்க ஒரு படம் தொடங்கியிருந்தார். ஆனால் சுதீப் தற்போது நடித்து வெளிவந்த படம் தோல்வியை தழுவியதால் சத்யஜோதி பிலிம்ஸ் அப்படத்தில் இருந்து விலகி விட்டது. இப்பொழுது வெங்கட்பிரபு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்.

Also Read: அப்பா மீது உச்சக்கட்ட கடுப்பில் வெங்கட் பிரபு

தமிழில் மாநாடு வெற்றியைத் தொடர்ந்து பல வாய்ப்புகள் தேடி வந்த பொழுது அதை அலட்சியம் செய்து பணத்திற்காக தெலுங்கு, மற்றும் கன்னடம் பக்கம் சென்ற வெங்கட் பிரபுவிற்கு இது தேவைதான். இதுபோல் தமிழில் தோல்விப் படங்களைக் கொடுத்து விட்டு வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கு பக்கம் செல்லும் இயக்குனர்கள் இப்பொழுது அங்கும் தோல்வியை மட்டுமே தழுவி கொண்டிருக்கின்றனர்.

லிங்குசாமியின் தோல்வி, வெங்கட்பிரபுவின் இந்த நிலை பார்த்து மற்ற இயக்குனர்கள் இப்போது மற்ற மொழி படங்களை பயத்துடன் இயக்குகிறார்கள். இனிமேல் இயக்கப்போகும் இயக்குனர்கள் அதிலிருந்து வெளி வருவார்கள் என்று நன்றாகத் தெரிகிறது. தமிழ் இயக்குனர்கள் இங்கு மட்டுமே உங்கள் படங்களை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் வேறு எங்கும் உங்கள் படம் ஏற்கப்படாது என்பதற்கு இதுவும் சில உதாரணம்.

Also Read: ரசிகர்களை ஓடவிட்ட லிங்குசாமியின் 5 படங்கள்