சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விலகி ஓடிய அருண் விஜய்.. வெங்கட் பிரபுவை 4 திசையிலும் ஆட்டிப்படைக்கும் கெட்ட நேரம்

வெங்கட் பிரபு சிம்புவை வைத்து இயக்கிய மாநாடு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ஆனால் இப்படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுக்கு ஒரு பட வாய்ப்பு கூட வரவில்லை. இதனால் அக்கட தேசத்து நடிகரை வைத்து படம் இயக்கலாம் என்ற யோசனையில் வெங்கட்பிரபு இறங்கியிருந்தார்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்த தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தில் வில்லனாக நடிக்க அருண் விஜய் தேர்வாகி உள்ளதாக உறுதிபட தகவல் வெளியானது.

அண்மையில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதைத் தொடர்ந்த அருண் விஜய் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் அடுத்தடுத்த ரிலீசுக்கு காத்திருக்கிறது.

இந்நிலையில் வெங்கட்பிரபு படத்தில் இருந்து அருண்விஜய் விலகி விட்டாராம். ஏனென்றால் சமீபகாலமாக நாக சைதன்யாவின் படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. கடைசியாக நாக சைதன்யா நடிப்பில் வெளியான தேங்க்யூ படமும் தோல்வியை சந்தித்தது.

மேலும் வெங்கட்பிரபுவின் படத்தின் ஷூட்டிங்கும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இதனால்தான் அருண் விஜய் இப்படத்தில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தயாரிப்பு தரப்பிலிருந்து வெங்கட் பிரபுவுக்கு மிகப்பெரிய குடைச்சல் கொடுத்து வருகிறார்களாம்.

இதனால் வெங்கட் பிரபு தற்போது ட்ரெண்டில் உள்ள மற்றொரு வில்லன் நடிகரை தேடி வருகிறாராம். ஒருவேளை மாநாடு படத்தில் நடித்த எஸ் ஜே சூர்யா இப்படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் வெங்கட் பிரபுக்கு நாலா திசைகளிலிருந்தும் கெட்ட நேரம் ஆட்டிப்படைக்கிறது.

- Advertisement -

Trending News