செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024

வன்முறைகளை தூக்கி வைத்துக் கொண்டாடும் தமிழ் சினிமா.. சூப்பர் ஸ்டாரும் உடந்தை ஆன பரிதாபம்

தமிழ் சினிமா சமீபத்தில் வன்முறை கதைக் களத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த மாதிரி படங்களைத்தான் ரசிகர்களும் விரும்புகிறார்கள். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படம் முழுக்க முழுக்க சண்டைகள் நிறைந்த படமாக இருந்தது.

இந்த படத்தில் அதிரடி சண்டைக்காட்சிகள் பஞ்சமில்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருந்ததால் உலக அளவில் 300 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது. எனவே இது போன்ற பாணியிலேயே அடுத்தடுத்த படங்களை எடுக்க இயக்குனர்கள் முனைப்பு காட்டுகின்றனர்.

இப்பொழுது ரஜினி-நெல்சன் கூட்டணியில் உருவாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 169 படம். இந்த படத்திற்கு ஜெயிலர் என்று தலைப்பு வெளியிடப்பட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்ட் ரத்தக்கறையுடன் இருக்கிறது. ஜெயிலர் படம் முழுவதும் சிறை மற்றும் சிறைச்சாலை சம்பந்தப்பட்ட கதைக்களத்தை கொண்டிருப்பதால் இப்படிப்பட்ட டைட்டில் வைத்திருக்கின்றனர்.

விக்ரம் படத்திற்கு பிறகு வன்முறைகளை தூக்கி வைத்துக் கொண்டாடுகிற தமிழ் சினிமாவில் அப்படிப்பட்ட படம் எடுத்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்பதற்காக ரஜினி கூட இந்த மாதிரி படங்களை அதிகம் விரும்புவதாக தெரிகிறது. சமீபத்தில் சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குடும்ப படமான அண்ணாத்த கூட எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

இந்த படத்தின் கதையும் பிரம்மாண்டமாக இல்லாததால் ரஜினி நடித்ததினாலேயே கலவையான விமர்சனங்களுடன் நல்ல வசூலைப் பெற்றது. ஆகையால் அடுத்த படத்தில் நிச்சயம் ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக ஜெயிலர் படத்தில் கூடுதல் வன்முறையை திணிப்பதாக தெரிகிறது.

அதனால் ரத்தம் கலந்த ஆக்சன் படங்களையே மக்கள் விரும்புவதால் அதையே தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது தமிழ் சினிமா. அதற்கு தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் உடந்தையாக இருப்பது தான் பரிதாபம். இதை இவருடைய ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்து பார்த்தாலே தெரிகிறது.

jailer-cinemapettai
jailer-cinemapettai
- Advertisement -spot_img

Trending News