லாஜிக்கே இல்ல, காமெடியை மலைபோல் நம்பி ஹிட்டான 7 படங்கள்.. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குமடா சாமி

சினிமாவைப் பொருத்தவரை ரசிகர்கள் பலருக்கும் பல விஷயங்கள் பிடிக்கும் ஒரு சில ரசிகர்களுக்கு காமெடி பிடிக்கும் மற்ற சில ரசிகர்களுக்கு ஆக்ஷன் பிடிக்கும். அதற்காகத்தான் இயக்குனர்கள் பலரும் படத்தில் ஆக்ஷன் காமெடி என இரண்டும் இருக்கும்படி படத்தை எடுத்து முடிப்பார்கள். அதுமட்டுமில்லாமல் படத்தில் கூடுதல் சுவாரஸ்யம் வேண்டும் என்பதற்காக திரில்லர் உடன் கவர்ச்சியும் சேர்த்து படக்காட்சிகளை அமைப்பார்கள்.

தமிழ் சினிமாவில் பல்வேறுவிதமான கதை களத்தில் ஏராளமான படங்கள் வெளியாகி உள்ளன. இதில் ரசிகர்களுக்கு அதிகம் ரசிக்கக் கூடிய அளவிற்கு படக்காட்சியில் இருக்கிறதோ அந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை வாரிக் குவிக்கின்றன.

சினிமாவைப் பொருத்தவரை எந்த மாதிரியான படங்கள் வெற்றி பெறுகின்றன அதனை மையமாக வைத்து அனைத்து இயக்குனர் படங்களை எடுப்பார்கள் உதாரணத்திற்கு பேய் படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றால் அனைத்து இயக்கங்களிலும் பேய் கதையை மையமாக வைத்து படங்களை இயக்குவார்கள். அப்படித்தான் ஏராளமான பேய் படங்கள் வெளியாகின.

ஆனால் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியான நிறைய படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்று தற்போது வரை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகின்றன. மேலும் காமெடி படங்கள்தான் ரசிகர்களுக்கு அதிகம் பிடிக்கிறது.

சுந்தரா டிராவல்ஸ்: முரளி மற்றும் வடிவேல் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ். இப்படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாகக் கொண்டு உருவானது. படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காமெடி காட்சிகளிலும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன.

sundara-travels-2
sundara-travels-2

வின்னர்: பிரசாந்த் மற்றும் வடிவேலு நடிப்பில் உருவானது வின்னர் திரைப்படம். இப்படத்தில் இடம்பெற்ற கைப்புள்ள கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காமெடி காட்சிகளுமே பெரிய அளவில் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.

மருதமலை: அர்ஜுன் மற்றும் வடிவேலு நடிப்பில் உருவான மருதமலை திரைப்படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாகக் கொண்டு உருவானது. அதுவும் இப்படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் போலீஸ் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

சிவா மனசுல சக்தி: ஜீவா மற்றும் சந்தானம் நடிப்பில் உருவான சிவா மனசுல சக்தி திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதுவும் சந்தானம் பேசும் டைமிங் காமெடி தான் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இப்படம் முழுக்க முழுக்க காமெடி மையமாகக்கொண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்: சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் வெளிவந்த இந்த படம் காமெடி ஆக மட்டுமே சூப்பர் ஹிட்டானது. படிக்காமல் ஊரை சுற்றும் 2 கிராமத்து இளைஞர்களை வைத்து கதை நகரும். ஒவ்வொரு காட்சியும் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்து விடுவார்கள் என்பதுதான் உண்மை.

டாக்டர்: சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் தற்போது பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை படைத்து வருகிறது டாக்டர். இந்த படத்தில் பல லாஜிக் மிஸ் ஆனாலும் காமெடியை மட்டும் வைத்து படம் ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. யோகி பாபு உடன் சேர்ந்து ரெடின் கிங்ஸ்லி அடிக்கும் லூட்டி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.

இதே வருசையில் ஓகே ஓகே மற்றும் சீனாதானா 007 போன்ற படங்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன. மேற்கண்ட எந்த படங்களுமே பெரிய அளவில் லாஜிக் இல்லாமல் தான் கதைக்களம் அமைந்திருக்கும். ஆனால் படத்தில் காமெடி மையமாகக்கொண்டு வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.

Next Story

- Advertisement -