5 மாஸ் ஹீரோக்களை உருவாக்கிய படங்கள்.. தனக்குத்தானே சிம்பு கொடுத்த சூப்பர் ஹிட்

சூர்யா: நடிகர் சூர்யாவின் நடிப்பில், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆனந்த் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான அயன் திரைப்படம் இன்றளவும் ரசிகர்களின் பேராதரவை பெற்ற திரைப்படமாகும். தங்கம்,வைரம் கடத்தல் தொடர்பான கதைக்களத்தோடு உருவான

இத்திரைப்படம் கிட்டத்தட்ட பல நாடுகளில் எடுக்கப்பட்டது.இதில் சூர்யா ஏர்போர்ட்டிற்கு தங்கத்தை அல்லது வைரத்தை கடத்திச் செல்லும்போது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கெட்டப்பில் செல்வார். சூர்யா நடித்த திரைப்படங்களிலேயே அயன் படத்தில் தான் சூர்யா அதிகமான கெட்டப்புகளில் வலம் வந்தார்.

Also read: பெரும் தலைவலியில் மாட்டிக்கொண்ட சூர்யா.. கடுமையாக எச்சரிக்க தயாரிப்பாளர்

விக்ரம்: இயக்குனர் ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் உருவான அந்நியன் திரைப்படம் இன்று வரை ரசிகர்களின் பேவரைட் திரைப்படமாக அமைந்து வருகிறது. சமூகத்தில் உள்ள அவலங்களை தடுப்பதற்காக அம்பியாக நடித்த விக்ரம், திடீரென்ற அந்நியனாக மாறுவதும், காதலுக்காக ரெமோவாக மாறும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் விக்ரமின் கேரியரில், அவரே திரும்ப நடித்தாலும் அந்நியன் திரைப்படம் நடிக்க இயலாத திரைப்படமாக பார்க்கப்படுகிறது.

சிம்பு: சிம்பு கதை எழுதிய திரைப்படமான மன்மதன் திரைப்படத்தில் அண்ணன், தம்பி என இரு வேடங்களில் சிம்பு நடித்திருப்பார். தனது தம்பியின் தற்கொலையால் பாதிக்கப்பட்ட சிம்பு அதற்கு காரணமான பெண்களை பழிவாங்கும் உணர்வோடு மன்மதனாகவே சிம்பு நடித்து இருப்பார். இத்திரைப்படம் நடிகர் சிம்புவின் வாழ்வில் முக்கியமான திரைப்படமாக பார்க்கப்பட்டு வருகிறது.

Also read: தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கும் பாலா.. ஆர்யாவை தொடர்ந்து மாட்டிக் கொண்ட சூர்யா

விஜய் சேதுபதி: விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரியின் இயக்கத்தில் விக்ரம் வேதா திரைப்படத்தில் வேதா கதாபாத்திரத்தில் களமிறங்கினார். இக்கதாபாத்திரத்தின் வசனங்களும் சரி, வில்லத்தனமான நடிப்பும் சரி விஜய் சேதுபதியை இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் என்று சொல்லலாம். இத்திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு நெகடிவ் ரோல்களில் நடிக்க தற்போது வரை வாய்ப்புகள் கிடைத்து வருகிறது:

கார்த்தி: வந்தியதேவனாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து அசத்தியுள்ள கார்த்தியின் முதல் திரைப்படம் பருத்திவீரன். இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் கார்த்தி தனது முதல் திரைப்படம் போல் அவரது நடிப்பு அமைந்திருக்காது. அந்த அளவிற்கு அவரது நடிப்பு மெய்சிலிர்க்க வைத்தது இன்று வரை கார்த்தியின் சித்தப்பு என்ற வசனத்தை மீம்ஸ்களில் ரசிகர்கள் சிதற விட்டு வருகின்றனர்.

Also read: சூர்யாவின் உண்மை பெயரை மாற்றிய நபர்.. அனுமதிக்காக சிவகுமாரிடம் போன சிபாரிசு

Next Story

- Advertisement -