வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

நகமும் சதையுமாக நட்புடன் சுத்திவரும் 5 ஹீரோக்கள்.. உதயநிதி பெயரை வைத்து கூத்தடிக்கும் கூட்டம்

Very close famous 5 friends in tamil cinema: தோள் கொடுப்பான் தோழன் என்பது போல் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களையும், எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் ஷேர் பண்ணக்கூடியவர்கள் நண்பர்கள். கஷ்டத்தில் இருக்கும் போது ஆறுதலாக தேவைப்படும் நேரத்தில் உதவி செய்பவனாகவும் இருப்பவன் நண்பன். பிரண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு என்பதைப் போல சினிமாவில் இருக்கும் ஐந்து நண்பர்களை பற்றி பார்க்கலாம்.

ஆர்யா: ஆர்யா, விஷால், உதயநிதி, விஷ்ணு விஷால் பயங்கர க்ளோஸ் ஆன நண்பர்கள். ஆர்யாவுக்கு உதயநிதி தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் பாஸ் என்கிற பாஸ்கரன், மதராசப்பட்டினம் போன்ற பல ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார்கள். உதயநிதி ஆர்யாவின் கேப்டன் திரைப்படத்தை வைத்து மீடியாவில் கலாய்த்து தள்ளினார்.

Also Read:மொத்தமாக பட்ட நாமம் போட பார்த்த ரவீந்தர்.. மன உளைச்சலில் போன் நம்பரை மாற்றிய மகாலட்சுமி

விஷால்: விஷால், உதயநிதி ஸ்டாலினும் சின்ன வயதிலிருந்தே ஸ்கூல், காலேஜ் போன்றவற்றில் ஒன்றாக படித்தவர்கள் . இருவரும் சுமார் 25 வருட நண்பர்கள், விஷால் ஒரு பேட்டியில் உதயநிதி ஸ்டாலின், விஷால் வெங்கட் பிரபு மூவரும் பைக்கில் ட்ரிபிள் போகும்போது போலீசில் மாட்டினோம் என்று கூட கூறினார். எதாவது உதவி தேவை என்றால் உதயநதியிடம் தயங்காமல் கேப்பார்.

கார்த்தி: விஷால், கார்த்தி இருவரும் நடிகர் சங்கம் எலக்சன் டைம்மில் இருந்து நெருக்கமாகி, நீ இல்லாமல் நான் இல்லை என்பது போல் ஆகிவிட்டார்கள். நண்பர்கள் படத்திற்கு இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி மூலம் ப்ரோமோஷன் செய்வார்கள். சோசியல் மீடியா பேட்டிகளில் நண்பர்களை பற்றி கேட்டால் பயங்கரமாக ஒருவருக்கு ஒருவர் போட்டுக் கொடுத்து, கலாய்த்து கொள்வார்கள்.

Also Read:நெஞ்சை பதப்பதைக்க வைத்த சைக்கோ திரில்லர்.. ஜெயம் ரவியின் இறைவன் ட்விட்டர் விமர்சனம்

உதயநிதி: விஷால் படத்திற்கு உதயநிதியும், உதயநிதி படத்திற்கு விஷாலும் பிரமோஷன் செய்து சப்போர்ட் செய்து கொள்வார்கள். சுமாராக இருந்தால் இருவரும் ட்ரோல்லும் செய்து கொள்வார்கள். அதே போல தான் ஆர்யாவையும், வச்சி செய்வார். இப்படி நெருக்கமாக இருக்கும் காரணத்தால், படங்களிலும் நடித்து உதவியம் இருப்பார்கள். உதயநிதியின் ஓகே ஓகே திரைப்படத்தில் கூட, ஆர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்.

விஷ்ணு விஷால்: ஆர்யா, விஷால், விஷ்ணு விஷால் மூவரும் திக் பிரெண்ட்ஸ் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். என் நண்பனை போல யாரும் இல்லை என்பது போல, அப்படி ஒரு பிரெண்ட்ஷிப் . விஷ்ணு விஷால் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதை கவனித்த விஷாலும், ஆர்யாவும் இணைந்து ஜீவா என்னும் திரைப்படத்தை விஷ்ணுவின் வளர்ச்சிக்காக தயாரித்து வெளியிட்டனர்.

Also Read:ஜெய் பீம் மாதிரி ஒரு வெற்றி வேணும், நம்ம கிட்ட 3 கதை இருக்கு தலைவரே.. ரஜினி தேர்வு செய்த தலைவர்-170 இதுதான்

- Advertisement -

Trending News