ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

சினிமாவே வேண்டாம் என தலைதெறிக்க ஓடிய 6 நடிகர்கள்.. அப்படியே ஓடிப் போயிருங்க என பெருமூச்சு விட்ட தயாரிப்பாளர்கள்

சினிமாவில் நடிகனாக வேண்டும் என்பதற்காக பல பேர் சினிமாத்துறைக்கு வந்துள்ளனர். ஒரு சில படங்கள் மற்றும் வெற்றி கொடுத்துவிட்டு பின்பு பெரிய அளவில் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வராததால் பல நடிகர்கள்  சினிமாவை விட்டு தலைதெறிக்க ஓடி உள்ளனர் . அவர்களின் வரிசையில் அப்பாஸ் முதல் கரன் வரை இடம்பிடித்துள்ளனர். 

விக்ரமாதித்யா: விசில் என்ற படத்தின்  மூலம் அறிமுகமான விக்ரமாதித்யா. இந்த படத்தின் மூலம்  ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தார். எந்த அளவிற்கென்றால் விசில் பட நடிகர் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வந்துவிடும் விக்ரமாதித்யா தான்.

ஆனால் அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான பம்பரக்கண்ணாலே, தொல்லைபேசி, நண்பனின் காதலி மற்றும் நெஞ்சத்தை கிள்ளாதே ஆகிய படங்கள் எதுவுமே வெற்றி பெறாமல் இவரது சினிமா வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்தது. அதன் பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் வராததால் சினிமாவை விட்டு ஒதுங்கி உள்ளார்  நிரந்தரமாக.

vikramaditya shukla
vikramaditya shukla

மனோஜ்: தமிழ் சினிமா இயக்குனர்களில் முக்கியமானவர் பாரதிராஜா இவரது மகனான மனோஜ்  தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அதன்பிறகு எதிர்பார்த்த அளவிற்கு படங்கள் வெற்றி பெறாததால் சினிமா விட்டு விலகினார்.

கரன்: தமிழ் சினிமாவிற்கு தீச்சட்டி கோவிந்தன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான கரன் ரஜினி போன்ற பல நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். வில்லனாக ஒரு காலத்தில் கலக்கிய கரன் அஞ்சலியுடன்  ஒரு படத்தில்  ரொமன்ஸ் செய்தார். அதன் பிறகு  சினிமாவில் வெற்றி பெறாததால் நிரந்தரமாக சினிமாவை விட்டு விலகினார்.

karan
karan

சக்தி: ரஜினி போன்ற பெரிய நடிகர்களை வைத்து படங்களை இயக்கிய வாசுவின் மகன் தான் சக்தி. சின்னத்தம்பி மற்றும் ரிக்ஷா மாமா போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து கடைசியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சிவலிங்கா படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் வராததால் சினிமா விட்டு விலகியுள்ளார்.

shakthi vasudevan
shakthi vasudevan

அப்பாஸ்: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பல நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்  அப்பாஸ். அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் எந்த ஒரு படமும் வெற்றி பெறாததால் இவர் கடைசியாக ராமானுஜம் எனும் படத்தில் மட்டும் நடித்து விட்டு அதன் பிறகு தொழிலில் கவனம் செலுத்தி தற்போது தொழிலதிபராக செயல்பட்டு வருகிறார்.

abbas
abbas

யோகி: தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான தேங்காய் சீனிவாசனின் பேரன் தான் யோகி. யோகி அழகிய அசுரா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் படம் வெற்றி பெறாததால் ஆள் அடையாளம் தெரியாமல் சினிமாவை விட்டு விலகி உள்ளார்.

ரவி கிருஷ்ணா: 7ஜி ரெயின்போ காலனி என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த தயாரிப்பாளர் ஏஎம் ரத்னத்தின் மகனான ரவி கிருஷ்ணா அதன் பிறகு பெரிய அளவில் எந்த ஒரு படங்களிலும் வெற்றி கிடைக்காததால் சினிமாவை விட்டு விலகினார்.

ravi krishna
ravi krishna

மேற்கண்ட நடிகர்களைத் தவிர ஆர்யாவின் தம்பி சத்யா போன்ற பல நடிகர்கள் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் சினிமா விட்டு விலகி தற்போது தொழிலதிபர்களாக வாழ்க்கையில் பயணித்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News