டி20 உலகக்கோப்பை 2024, இந்தியா VS பாகிஸ்தான்.. அடப்பாவிகளா! ஒரு டிக்கெட் இத்தனை லட்சமா.?

டி20 உலக கோப்பை 2024 தொடருக்கான போட்டி அட்டவணையை சமீபத்தில் ஐ.சி.சி வெளியிட்டு இருந்தது. இதில் இந்திய அணி இடம் பெற்று இருக்கும் குரூப்பில் தான் பாகிஸ்தான் அணியும் இடம் பெற்றிருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி நேருக்கு நேர் அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள ஒரு புதிய மைதானத்தில் வரும் ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெறப்போகிறது.

இதற்கான டிக்கெட் விலை எவ்வளவு என்று கேட்டால் தலை சுற்றுகிறது. டி20 உலக கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதிக் மோதிக் கொள்வதை போட்டியை பார்ப்பதற்கான விற்கப்படும் ஒரு டிக்கெட்களில் ஆரம்ப விலை மட்டும் 1320 டாலர், அதாவது 1 லட்சத்து 10 ஆயிரம்.

இப்படியா லட்ச கணக்கில் டிக்கெட்டை விற்பது என்று கிரிக்கெட் பிரியர்கள் கழுவி கழுவி ஊற்றுகின்றனர். அது மட்டுமல்ல இதெல்லாம் கூட பரவாயில்லை டிக்கெட்டை பதிவு செய்வதற்கான கட்டணம் என்று தனியாக 396 டாலர் வசூலிக்கின்றனர். இதெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்லையா! எதுக்கு இப்படி கொள்ளையடிக்கிறீர்கள் என்று, இதை அறிந்த ரசிகர்கள் சரமாரியாக கமெண்ட் செய்கின்றனர்.

Also Read: ராகுல் டிராவிட் புக்கில் இதுவரை தெரியாத சுவாரசியமான10 விஷயங்கள்.. எல்லை மீறிய பொறாமையில் சானியா மிர்சா

டி20 உலகக்கோப்பை 2024, ஒரு டிக்கெட்டின் விலை

மேலும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய தீவுகளில் நடைபெறவிருக்கும் இந்த டி20 உலக கோப்பை போட்டியில் மொத்தம் பங்கேற்கும் 20 அணிகளை நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளனர். வரும் ஜூன் ஒன்றாம் தேதி துவங்க இருக்கும் இந்த தொடர் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

அது மட்டுமல்ல அமெரிக்காவில் ஒரு மிகப்பெரிய ஐசிசி தொடர் நடத்தப்படுவதும் இதுவே முதல் முறை. அங்கு தான் இந்தியாவும் பாகிஸ்தானும் ஜூன் 9ம் தேதி நேருக்கு நேராக மோத போகிறது. இதில் இந்தியா 2024 ஆம் ஆண்டிற்கான டி 20 வேர்ல்ட கப்பை தட்டி தூக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: 2023 அதிக சிக்ஸர்கள் விளாசிய 5 வீரர்கள்.. ரோஹித் சர்மாவை ஆச்சரியப்பட வைத்த முதலிடம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்