2023 அதிக சிக்ஸர்கள் விளாசிய 5 வீரர்கள்.. ரோஹித் சர்மாவை ஆச்சரியப்பட வைத்த முதலிடம்

5 players who hit most sixers in 2023: இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி ரன் மிஷின் என்றால் சிக்ஸர்கள் அடிப்பதில் ரோகித் சர்மா என்று கூறலாம். அதற்கு உதாரணம் 2023 உலகக்கோப்பை போட்டிகளை சொல்லலாம். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் போடுங்கள் நான் எல்லைக்கோட்டிற்கு வெளியில் தான் அடிப்பேன் என்று பல பவுலர்களை துவம்சம் செய்யும் அதிரடி கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த முதல் 5 வீரர்களின் தொகுப்பை இதில் காணலாம்,

5. டேரில் மிச்சல்: நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் இவர். டேரில் மிச்சல் வெகுவாக போட்டிகள் விளையாட விட்டாலும் இந்த ஆண்டிற்கான சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். 52 போட்டிகள் விளையாடிய இவர் 61 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

4. மிட்சல் மார்ஸ்: 2023 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக தனது மிகச்சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார். 33 போட்டிகள் விளையாடிய இவர் இந்த ஆண்டில் 61 சிக்ஸர்களை அடித்துள்ளார்.இவரும் நியூசிலாந்தின் டேரில் மிச்சல் ஒரே எண்ணிக்கையில் 61 சிக்ஸர்கள் அடித்து இருந்தாலும் இவர் 33 போட்டிகளில் அடித்தது சிறப்பு .

3. குஷால் மல்லா: நேபாள அணியின் வளர்ந்து வரும் வீரர் இவர். இவருக்கு தற்போது வயது 19 தான் ஆகிறது. இந்த ஆண்டில் மல்லா 32 போட்டிகள் விளையாடி 65 சிக்ஸர்களை ஆசியுள்ளார். நேபாள அணி இவரால் பல போட்டிகளை வென்றுள்ளது. அந்த அணியில் மிகவும் கவனிக்கத்தக்க வீரராக இவர் உருவாகி வருகிறார்

2. ரோகித் சர்மா: எதிரணி பவுலர்கள் ரோகித் சர்மாக்கு பவுன்சர் பந்துகளை வீச பயப்படுவார்கள். அந்த அளவிற்கு புல் சாட்டில் சிக்ஸர்கள் அடிப்பதில் வல்லவர் ரோகித். இந்த வருடம் வெறும் 35 போட்டிகள் விளையாடி 80 சிக்ஸர்களை அடித்து விரட்டியுள்ளார்.

1. முகமது வாசிம்: ஐக்கிய அரபு அமீரகம் அணியை சேர்ந்த இவர் எல்லோரையும் ஆச்சரியப்பட வைக்கும்படி 47 போட்டிகள் விளையாடி 101 சிக்ஸர்களை பறக்க விட்டிருக்கிறார். ஒரு ஆண்டில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.