ஆச்சரியப்பட வைக்கும் சூர்யா பட நடிகையின் சொத்து மதிப்பு.. இதுவரை நடித்த சூப்பர் ஹிட் படங்கள்

Suriya Movie Actress: சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படம் கலையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்து இரண்டு வருடம் கழித்து இப்பொழுதுதான் கங்குவா படம் திரைக்கு வர இருக்கிறது. அதாவது சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் 3d தொழில்நுட்பத்துடன் மிரட்டலான நடிப்பை கொடுக்கப் போகிறார். இதில் இவருடன் சேர்ந்து பாபி தியோல், திஷா பதானி, நடராஜன், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

அந்த வகையில் முதன்முதலாக தமிழில் சூர்யாவுடன் களமிறங்குகிறார் திஷா பதானி. இவர் முதன் முதலில் 2015 ஆம் ஆண்டு தெலுங்கு படமான லோஃபர் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் 2016 ஆம் ஆண்டு நடித்தார். இதனைத் தொடர்ந்து சைனாவில் ஜாக்கிசான் தயாரித்து நடித்த குங்ஃபூ யோகா என்ற படத்தில் நடித்து வந்தார்.

பிறந்தநாள் கொண்டாடும் சூர்யா பட நடிகை

அடுத்ததாக பாகி 2, பாரதம், ராதே போன்ற படங்களில் நடித்து பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார். அத்துடன் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி படத்திலும் நடித்துள்ளார். இன்னொரு பக்கம் சோசியல் மீடியாவில் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அவ்வப்போது கவர்ச்சியான போட்டோக்களை எடுத்து அதை இணையத்தில் தெறிக்க விடுவார்.

மேலும் இன்று பிறந்த நாளை கொண்டாடும் இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து நிலையில் கங்குவா மற்றும் கல்கி படக்குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட இவருக்கு 32 வயதாகிய நிலையில் ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு சொத்து மதிப்பு ஏகபோகமாக இருக்கிறது.

disha-patani
disha-patani

அதாவது மும்பையில் இருக்கும் பாந்த்ரா பகுதியில் உள்ள கர் இடத்தில் கடற்கரை பார்த்தபடி கிட்டத்தட்ட 5கோடி மதிப்பிலான பங்களாவை சொந்தமாக வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஒரு படங்களில் நடிக்க அதிகபட்சமாக 4 கோடி ரூபாய் வரை சம்பளத்தை பெறுகிறார். மேலும் விளம்பரங்களில் நடிப்பதற்காக 1.5 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.

இதனை தொடர்ந்து தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற அனைத்து பக்கங்களிலும் நடிப்புத் திறமையை காட்டி வருவதால் இவருடைய ஒட்டுமொத்த சொத்துக்களின் மதிப்பு தோராயமாக 75 கோடி வரை இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Next Story

- Advertisement -