தைரியமிருந்தா விஜய், அஜித்திடம் கேளுங்கள்.. கடுப்பாகி கத்திய சூர்யா

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்களது படம் வெளியானால் இந்த இரு ரசிகர்கள் மத்தியிலும் இணையத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெறும். தங்களது ஹீரோவை விட்டுக்கொடுக்காமல் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருவார்கள்.

அதேபோல் விஜய், அஜித்துக்கு அடுத்தபடியாக அதிகமான ரசிகர்களை வைத்து இருப்பவர் நடிகர் சூர்யா. ஆனாலும் பொது நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் சூர்யா கலந்துகொண்ட ரசிகர்களிடம் உரையாடி வருகிறார். மேலும் சூர்யா அகரம் என்ற அறக்கட்டளை மூலம் நிறைய குழந்தைகளை படிக்க வைக்கிறார்.

இதனால் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடம் நேரடியாக உரையாடி வருகிறார். ஆனால் விஜய், அஜித் இருவரையும் எளிதில் பார்த்துவிட முடியாது. எந்த பொது நிகழ்ச்சிகளிலும் அதிகமாக இவர்கள் கலந்து கொள்ளும் மாட்டார்கள்.

மேலும் சமீபத்தில் நடந்த நயன்தாராவின் திருமணத்தில் கூட சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் கலந்து கொண்டார். ஆனால் விஜய், அஜித் இருவருமே நயன்தாரா திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. மேலும் இந்த நடிகர்கள் பெரிய அளவில் பேட்டிகளும் கொடுக்கமாட்டார்கள்.

பல வருடங்கள் கழித்து விஜய் பீஸ்ட் படத்திற்காக சன் டிவியில் பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில் விஜய் மற்றும் அஜித்தை பத்திரிக்கையாளர்கள் சந்தித்தால் எந்த கேள்வியையும் கேட்க மாட்டார்கள். ஆனால் சமீபத்தில் சூர்யாவை பார்த்த பத்திரிக்கையாளர் ஒருவர் பேட்டி ஒன்று கொடுக்க முடியுமா என கேட்டுள்ளார்.

அதற்குள் சூர்யா தைரியமிருந்தால் என்னிடம் கேட்டது போல் விஜய், அஜித்திடம் உங்களால் கேட்க முடியுமா என்று கத்திவிட்டு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. பேட்டி கொடுப்பீர்களா என்று தானே கேட்டார், அதற்கு ஏன் சூர்யா இவ்வளவு கோபப்பட்டார் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Next Story

- Advertisement -