விஜய்யை தொடர்ந்து சூர்யாவுக்கு வந்த பணத்தாசை.. அதிர்ச்சியில் பல தயாரிப்பாளர்கள்

தமிழ் திரையுலகில் விஜய் நடிக்கும் படங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும். அதன் காரணமாகவே இவருடைய திரைப்படங்கள் கலெக்ஷனிலும் மாஸ் காட்டும். இதனால் இவரை வைத்து படம் தயாரிக்க பலரும் போட்டி போட்டு வருகின்றனர்.

அதிலும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் தற்போது தமிழ் ஹீரோக்களை குறி வைத்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் வாரிசு திரைப்படத்தின் மூலம் நேரடி தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கிறார். அவரைத் தொடர்ந்து தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்

இந்த வரிசையில் தற்போது நடிகர் சூர்யாவும் இணைந்துள்ளார். தமிழில் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் தெலுங்கு திரைப்படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறாராம். இந்தப் படத்தை சௌர்யம் சிவா இயக்க இருக்கிறார்.

வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இப்படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த சூர்யா அதிக சம்பளம் கிடைக்கும் என்ற நோக்கில் தெலுங்கு பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறார்.

இப்படி தமிழின் டாப் ஹீரோக்கள் அடுத்தடுத்து தெலுங்கு திரையுலகை குறிவைப்பதை பார்த்த தமிழ் தயாரிப்பாளர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இப்படி ஹீரோக்கள் அனைவரும் தெலுங்கு தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தால் தமிழ் தயாரிப்பாளர்களின் கதி என்ன என்ற கலக்கமும் திரையுலகில் ஏற்பட்டுள்ளது.

சமீப காலமாக திரையுலகில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. அதனால்யே முன்னணியில் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் கூட படம் எடுப்பதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர்களும் போட்டிக்கு வருவதால் தமிழ் தயாரிப்பாளர்கள் நிலைகுலைந்து போய் இருக்கின்றனர்.

Next Story

- Advertisement -