சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ரஜினியைப் போல நடிகைக்கு ஒரு கோடி சம்பளம் கொடுத்த சூர்யா.. படையப்பாவை அசர வைத்த சம்பவம்

Rajini-Suriya: பொதுவாக ஹீரோக்களின் சம்பளம் கோடிக்கணக்கில் இருந்தாலும் நடிகைகளின் சம்பளம் அதில் சொற்பமாகத்தான் இருக்கும். ஆனால் தமிழ் சினிமாவின் அங்கமாக பார்க்கப்படும் சில பிரபலங்களை ஒரு சில கதாபாத்திரத்திற்கு படங்களில் பயன்படுத்துவது வழக்கமாகத்தான் இருக்கிறது.

அந்த வகையில் ரஜினி பிரபல நடிகருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க சொன்னது போல் சூர்யாவும் செய்து இருக்கிறார். அதாவது கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான படையப்பா படத்தில் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். மேலும் அந்தப் படத்தில் சில காட்சிகளில் மட்டும்தான் சிவாஜி இடம் பெறுவார்.

Also Read: விவாகரத்து நடிகையுடன் நெருக்கம் காட்டிய தனுஷ்.. மாணிக் பாட்ஷாவாக மாறி ரஜினி மிரட்டிய சம்பவம்

இந்நிலையில் ரஜினி படையப்பா படத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை சிவாஜிக்கு கொடுக்க சொன்னார். அவரின் பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல் படக்குழுவும் சிவாஜுக்கு ஒரு கோடி ரூபாய் தொகையை கொடுத்து விட்டது. அதேபோல் பல வருடங்களுக்குப் பிறகு சினிமாவில் மீண்டும் நடிக்க வந்தவர் சரோஜாதேவி.

அந்த வகையில் சூர்யா நடிப்பில் வெளியான ஆதவன் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். அப்போது நடிகர் சூர்யா சரோஜாதேவிக்கு இந்த படத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கும்படி இப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதியிடம் கூறியிருக்கிறார். அதுவும் தன்னுடைய சம்பளத்தில் அந்த தொகையை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளார்.

Also Read: மனைவி பேச்சுக்கு அடிபணிந்து போகும் சூர்யா.. ஜோதிகாவால் ஏற்பட்ட மாற்றம்

சூர்யா கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப உதயநிதியும் ஆதவன் படத்திற்காக சரோஜா தேவிக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்துவிட்டார். ஆனால் சூர்யாவின் சம்பளத்தில் கை வைக்கவில்லையாம். இவ்வாறு மூத்த நடிகர்களுக்கு மரியாதை கொடுக்கும் விஷயத்தில் நடிகர் சிவக்குமாரின் மகன்களை அடித்து கொள்ள ஆளே இல்லை.

மேலும் ஆதவன் படத்தில் வயது முதிர்வடைந்தாலும் தன்னுடைய முகபாவனை மற்றும் நடிப்பின் மூலம் படத்தில் ஸ்கோர் செய்துவிட்டார் சரோஜாதேவி. இவரைப் போன்ற அற்புதமான நடிகைகள் இனி தமிழ் சினிமாவில் பார்ப்பது சொற்பம் தான். அவர்களின் நடிப்புக்கு எவ்வளவு கொட்டி கொடுத்தாலும் ஈடாகாது.

Also Read: சிவாஜி, சரோஜா தேவியும் கோடியில் சம்பளம் வாங்கிய ஒரே படம்.. அதிகபட்சமாக வாங்கி கொடுத்த ரஜினி

- Advertisement -

Trending News