பிக் பாஸை விட இரண்டு மடங்கு பணத்தை கொட்டி கொடுக்கும் சர்வைவர்.. விஜய் டிவி டிஆர்பி-யை அடித்து நொறுக்கும் ஜீ தமிழ்

அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சுமார் 40 சீசன்களை கடந்து மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சி தான் சர்வைவர். தற்போது இந்நிகழ்ச்சி முதல் முறையாக தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ஆக்ஷன் கிங் அர்ஜூன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 90 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சுமார் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் 90 நாட்கள் வரை தாக்கு பிடிக்கும் போட்டியாளருக்கு சர்வைவர் டைட்டில் மற்றும் ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி நடிகர் விக்ராந்த், நடிகை சிருஷ்டி டாங்கே, பெசன்ட் ரவி, அம்ஜத் கான், விஜே பார்வதி, லட்சுமி பிரியா, சிங்கப்பூர் ராப் பாடகர் லேடி காஷ், காயத்ரி ரெட்டி, உமாபதி ராமையா, நந்தா, விஜயலட்சுமி, இந்திரஜா சங்கர், சரண் சக்தி, நாராயணன் லக்கி, ராம் சி ஆகிய 16 போட்டியாளர்கள் சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இன்னும் இரண்டு பேர் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் களமிறங்க உள்ளனர்.

நிகழ்ச்சியின் முதல்நாளே போட்டியாளர்கள் காடர்கள், வேடர்கள் என இரு அணியாக பிரிக்கப்பட்டனர். இரண்டாவது நாள் முதல் கடுமையான சவால்கள் துவங்கியது. அதேபோல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சவால்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இரண்டே நாட்களில் போட்டியாளர்கள் இடையே சண்டைகளும் ஆரம்பமாகி விட்டது.

மேலும் வாரம் ஒருவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார். அவர் யார் என்பதை போட்டியாளர்களே ஓட்டு போட்டு தீர்மானிப்பார்களாம். மொத்தம் 90 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு யார் இறுதிவரை போட்டியில் தாக்கு பிடிக்கிறாரோ அவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்.

survivor-soon
survivor-soon

கிட்டத்தட்ட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி போலவே சர்வைவர் உள்ளது. பிக்பாஸில் வெற்றி பெற்ற போட்டியாளருக்கு 50 லட்சம் தான் பரிசாக கொடுக்கப்படும், ஆனால் சர்வைவர் நிகழ்ச்சியில் 2 மடங்கு என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதிலும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அடித்து கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் உள்ளனர். இறுதியில் யார் வெல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்