செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

நொந்து நூடுல்ஸ் ஆன விஜயலட்சுமி.. காட்டிருக்கும் மனைவியால் வீட்டிலிருக்கும் கணவரின் குமுறல்!

பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியை தமிழில் தொகுத்து வழங்க போகிறார் சிம்பு என்ற செய்தி வந்ததும் ரியாலிட்டி ஷோக்களுக்கு நிறைய மவுசு வரபோகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘சென்னை 600028’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. அதன்பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திலும் விஜயலஷ்மி நடித்திருப்பார். இவர் திரையுலகில் முன்னணி நடிகையாக வர முடியாவிட்டாலும் ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும், அதன் பிறகு டிவி சீரியல்களிலும் காலத்தை ஓட்டினார் விஜயலஷ்மி.

அதன்பிறகு தற்போது ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ஏனென்றால் பிக் பாஸ் சீசன்2 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக நுழைந்த விஜயலஷ்மி ஒரு சில தினங்களிலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளி வந்தார். அப்போது தவறவிட்ட வாய்ப்பை தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சர்வைவர் என்ற ரியாலிட்டி ஷோவில் மீண்டும் பங்கேற்றுள்ளார். கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் விஜயலட்சுமி உட்பட 12 போட்டியாளர்கள் பங்கேற்று ஆப்பிரிக்கா காடுகளில் சாகசங்களை மையமாகக்கொண்டு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் சர்வைவர் நிகழ்ச்சியில் இருக்கும் விஜயலட்சுமிக்கு, செப்டம்பர் 28ஆம் தேதி திருமண நாள் என்பதால், விஜயலட்சுமியின் கணவர் ஃபெரோஸ் முகமது,  விஜயலட்சுமியின் பிரிவை தாங்க முடியாமல் சோஷியல் மீடியாவில் குமுறி உள்ளார்.

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. எனவே, இனி ரியாலிட்டி ஷோ வேண்டாம் என்றும் அவர்களுடைய குடும்ப புகைப்படத்துடன் உருக்கமான பதிவை சமூக வலைத்தளங்களில் ஃபெரோஸ் முகமது தெரிவித்துள்ளார்.

survivor-viji-cinemapettai
survivor-viji-cinemapettai

மேலும் சர்வைவர் கலந்துகொள்ளும் பேட்டியாளர் காடர்கள், வேடர்கள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் மன வலிமையும் உடல் வலிமையும் பரிசோதிக்கும் வகையில் நாளுக்கு நாள் கடுமையான போட்டிகளை வழங்கி யார் 90 நாட்கள் தாக்குப்பிடிப்பார்களோ அவர்களுக்கே ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும்.

எனவே மூன்று மாதம் நடைபெறும் இந்தப் போட்டியில் தற்போதுவரை ஸ்ருஷ்டி டாங்கே மற்றும் இந்திரஜா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். எனவே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சர்வைவா நிகழ்ச்சியில் விஜயலட்சுமி சாதுரியமாக போட்டி போடுவதை தற்போது ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

Trending News