எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. சர்வைவருக்கு முன், பின் உமாபதி வெளியிட்ட புகைப்படம்

பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான தம்பி ராமையாவின் மகன் நடிகர் உமாபதி. தற்போது அதாகப்பட்டது மகாஜனங்களே, தேவதாஸ் என இரண்டு படங்களில் நாயகனாக நடித்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி போட்டியாளராக பங்கு கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் ரசிகர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உடையவர் உமாபதி. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே உமாபதி எல்லா போட்டிகளிலும் தன்னுடைய திறமையை காட்டி வெற்றி பெற்று வந்தார். இந்நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளர்களில் ஒருவராக கருதப்பட்டார் உமாபதி.

சர்வைவர் நிகழ்ச்சியில் விக்ராந்த், இனிகோ, விஜயலட்சுமி, உமாபதி ஆகியோரின் நட்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.உமாபதி, விஜயலட்சுமி, சரண் மற்றும் வனேசா இறுதி சுற்றுக்கு தேர்வாளர்கனர்கள். இதில் இரண்டாவது பைனல் லிஸ்ட் விஜி தேர்ந்தெடுக்கலாம் என்ற இம்முநிடி விஜயலட்சுமி இடமிருந்தது.

எல்லோரும் உமாபதியை தான் விஜயலட்சுமி தேர்ந்தெடுப்பார் என கருதப்பட்ட நிலையில் விஜி வனேசாவை தேர்ந்தெடுத்தார். உமாபதி இந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் விளையாட்டில் கவனம் செலுத்த முடியாமல் தோற்றுப்போனார்.

சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி தோற்றுப்போனலும் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளார். இந்நிகழ்ச்சிக்கு செல்லும்போது உமாபதி 80 கிலோ இருந்துள்ளார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு ஆறு கிலோ குறைந்து உள்ளாராம். சர்வைவர் நிகழ்ச்சியால் உமாபதியின் தோற்றம் மாறினாலும் அவருடைய புன்னகை மாறாது என அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

umapathy ramaiah
umapathy ramaiah

அத்துடன் அவர் சர்வைவர் நிகழ்ச்சி செல்வதற்கு முன் உள்ள புகைப்படத்தையும் தற்போது எடுத்த புகைப்படத்தையும் இணைத்து எப்படி இருந்த நான் இப்படி மாறி விட்டேன் என்று பதிவிட்டிருந்தார். சர்வைவர் நிகழ்ச்சியின் மூலம் உமாபதிக்கு நிறைய பட வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளது. இதை சரியாக பயன்படுத்தி உமாபதி முன்னணி நடிகர்களில் ஒருவராக வர வாய்ப்புள்ளது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை