செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

நான் குளிச்சு பல நாள் ஆச்சு.. சர்வைவர் அனுபவத்தை புட்டு புட்டு வைத்த VJ பார்வை

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சர்வைவர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்ற விஜே பார்வதி தற்போது எலிமினேட் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார். சர்வைவர் பார்வதியை செய்தியாளர்கள் பேட்டி எடுத்துள்ளனர். அப்போது பார்வதி, இந்தியாவில் பல இடங்களுக்கு சுற்றி திரிந்து உள்ளதாகவும், முதன்முதலில் ஆப்பிரிக்கா வரைக்கும் சென்று ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்பதற்கான வாய்ப்பு சர்வைவர் நிகழ்ச்சி மூலம் தனக்கு கிடைத்ததாக தெரிவித்தார். இந்தியாவை தாண்டி எங்கும் செல்லாத பார்வதி ஆப்பிரிக்காவிற்கு அழைத்துச் செல்கிறார்கள் என்ற உடனே சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால் இவரின் தோழிகள், உறவினர்கள் என அனைவரும் சர்வைவர் நிகழ்ச்சி மிகவும் கடினமாக இருக்கும் என்று எச்சரித்தனர். அதற்கு, அதையும் பார்த்து விடலாம் என்று பார்வதி கூறியுள்ளார். இவ்வாறு வீரமாக பேசி விட்டு, வெகு விரைவில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார் பார்வதி. வெளியில் வந்த பார்வதி தற்போது, தான் ஆப்பிள் பழம் போல் இருந்ததாகவும் சர்வைவர் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு நாவல் பழம் போல் ஆகி விட்டதாகவும் கூறி வருகிறார்.

அத்துடன் பேட்டியில் இது போன்று பல தாறுமாறான செய்திகளைச் கூறியுள்ளார் பார்வதி. தற்போது இவர் அளித்துள்ள பேட்டி, நெட்டிசன்களுக்கு கிடைத்த பெரிய தீனியாக ஆகிவிட்டது. அதாவது, என்னை நானே கார்னர் செய்து கொள்ளவில்லை என்றும் நான் உண்மையிலேயே கார்னர் செய்யப்பட்டேன் என்றும் கூறுகிறார். அங்கு நடந்ததை நான் வெளியில் கூறுவதால் நீங்கள் என்னை திட்டினாலும் திட்டிக் கொள்ளுங்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அதேசமயம் சர்வைவர் நிகழ்ச்சியில் குளிப்பதற்கும், தனிப்பட்ட வேலைகளை செய்வதற்கும் அங்கு ஒரு வசதி கூட இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். அடிப்படை உரிமைகள் எதுவும் அங்கு ஒழுங்காக இல்லாத நிலையில் தான் போட்டியாளர்கள் சர்வைவ் செய்து வருகின்றனர் என்று கூறியுள்ளார். அத்துடன் தான் நன்றாக குளித்தே பல நாட்கள் ஆகிவிட்டது என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

vj-parvathy-cinemapettai12
vj-parvathy-cinemapettai12

இவர் விஜேவாக பணியாற்றியதால் சக போட்டியாளராக இருக்கும் சிலரை ஏற்கனவே பேட்டி எடுப்பதன் மூலம் அறிமுகமாகி இருந்ததாகவும், சர்வைவர் நிகழ்ச்சி மூலம் அவர்களுடன் நெருக்கமாக பழகுவதற்கான வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறியுள்ளார் பார்வதி. சர்வைவர் நிகழ்ச்சியில் சில போட்டியாளர்களால் நான் கார்னர் செய்யப்பட்டாலும் அதே போட்டியாளர்களை வெளியில் சந்திக்கும்போது எப்போதும் போல் சகஜமாக அவர்களுடன் பழகுவேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை பற்றி யார் எப்படி ட்ரோல் செய்து கலைத்தாலும் யாருக்காகவும் நான் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்றும் என்னை தொடர்ந்து கேலி செய்து வருபவர்கள் அப்படியே செய்து வரட்டும் அவர்களைப் பற்றி சிறிதும் நான் யோசிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். தற்போது இவர் சிவகுமாரின் சபதம் என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News