புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

நான் தவறு செய்யவில்லை.. சர்வைவரில் இருந்து வெளியேறிய பெசன்ட் ரவியின் முதல் பதிவு

நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியில் இந்த வாரம் பெசன்ட் ரவி வெளியேறியுள்ளார். வேடர்கள் அணியின் மிகப்பெரிய பலமாக  இருந்தவர் பெசன்ட் ரவி. அவர் தீவிலிருந்து போட்டியாளர்களால் மூன்றாம் உலகத்திற்கு அனுப்பப்பட்டார்.

அங்கு ஏற்கனவே இருந்த நடிகை விஜயலட்சுமியுடன் அவருக்கு போட்டி வைக்கப்பட்டது. இதில் விஜயலட்சுமி வெற்றி பெற்றதால், பெசன்ட் ரவி நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

தற்போது பெசன்ட் ரவி சர்வைவர் நிகழ்ச்சிக்குப் பின் தன்னுடைய முதல் பதிவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் சர்வைவர் நிகழ்ச்சி வலி, சோகம், வேதனை, காதல் போன்ற அனைத்தும் அடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் நான் எந்த தவறும் செய்யவில்லை. உங்களுடைய அன்பையும் ஆதரவையும் பார்க்கும் பொழுது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.  அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் என் நன்றி  என்று கூறியுள்ளார்.

மேலும் என்னால் முடிந்தவற்றை நான் இந்நிகழ்ச்சியில் கொடுத்திருக்கிறேன். சர்வைவர் நிகழ்ச்சி எனக்கு மறக்க முடியாத ஒன்று. இந்த தருணத்தை என்றென்றும் வாழ்க்கையில் நான் வைத்திருப்பேன்,  அனைவருக்கும் என் நன்றி என்று  பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரல் ஆகியுள்ளது. பெசன்ட் ரவியின் வெளியேற்றம் மிகுந்த வருத்தம் அளிப்பதாக ரசிகர்கள் கருத்து கூறுகின்றனர்.

- Advertisement -

Trending News