அடிக்கடி அந்த மாடல் அழகியை இடுப்பில் தூக்கி வைத்து கொள்ளும் சர்வைவர் போட்டியாளர்.. என்னா புத்திசாலித்தனம்.?

பொதுவாகவே, சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அதிலும், திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளை சந்திக்கும் வகையான ரியாலிட்டி ஷோக்கு எப்போதும் ஒரு எதிர்பார்ப்பும், வரவேற்பும் உள்ளது.

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோ தான் சர்வைவர். இதில் பிரபல நட்சத்திரங்களான உமாபதி ராமையா, நந்தா, விக்ராந்த், விஜயலட்சுமி, பென்செட் ரவி, காயத்ரி ரெட்டி, வி.ஜே.பார்வதி, ரோபோ சங்கரின் மகள் இந்திராஜா, நடிகர் சரன் சக்தி, நடிகை லக்ஷ்மி பிரியா, நடிகர் ராம்கி நாராயணன், வீராங்கனை ஐஸ்வர்யா கிருஷ்ணன், பாடகி லேடி காஷ், நடிகர் அம்ஜத்கான் உள்ளிட்ட 16 பெயரை தேர்வு செய்து, 90 நாட்கள் காட்டிற்குள் அவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பது தான் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் தற்போது 16 ஆட்களே உள்ளன மீதம் 2 ஆட்கள் வைல்ட் என்ட்ரி இன் போது வருவர். இவர்கள் கார்டர் தீவு அணி, வேடர் தீவு அணி என இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் காடர் அணி தீபொரி உருவாக்கி அதில் ரொட்டி சமைத்து சாப்பிட்டனர். மறுபக்கம், மூன்று நாட்கள் பட்டினியாக கிடந்த வேடர்கள் அணி இறுதியாக, சில மரவள்ளி கிழங்குகளை உண்டனர்.

அதன்பின் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மற்றும் ஆக்சன் கிங் நடிகரான அர்ஜூன், இவர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுத்தார். அதில் ஒரு கண்டைனரை கொடுத்து, அங்கு இருக்கும் மரங்களை எடுத்துவிட்டு எங்கிருந்து சென்றார்களோ அந்த இடத்திற்கே திரும்பி வரவேண்டும் என்ற டாஸ்க்கை கொடுத்தார். அதன்பின் இரு அணிகளும் கேம்ப்ஃபயர்களை ஏற்றும் நிலை அமைந்தது.

அதன்பின், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அர்ஜூன் கயிற்றை நெருப்பினால் எறிக்கலாம் என்று அனுமதி அளித்தார். அப்போது வேடர் அணியை சேர்ந்த ‘பெசன்ட் ரவி’ புத்திசாலித்தனமாக, ஒரு முனையில் இருந்த கயிற்றை நெருப்பில் பொசுக்கினார். ஃபெசன்ட் ரவி செய்த அந்த செயலே அவர் அணி வெற்றி பெற காரணமாக இருந்தது.

ravi-survivor
ravi-survivor

இவரின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் இவர் அணியில் இருக்கும் சக போட்டியாளரான மாடல் அழகியை இடுப்பில் தூக்கி வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அது மட்டுமின்றி அடிக்கடி உற்சாகத்தை வெளிப்படுத்தும் விதமாக மாடல் அழகியை இடுப்பில் ஏற்றிக் கொண்டு வித்தை காட்டி வருகிறார்.

அதன்பிறகு, இந்த டாஸ்க்கில் வேடர்கள் அணி வென்றது, காடர்கள் அணி பின்தங்கியது. வென்ற அணியான வேடர்கள் அணிக்கு  நெருப்பு ஏற்றும் கருவி, தார்ப்பாய், நாற்காலி, கயிறுகள், போர்வைகள் போன்ற பல உபயோக கருவிகள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணி உற்சாகம் அடைந்தது தோல்வி அடைந்த அணி சற்று வருத்தமுற்றது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்