சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணி பேசி அம்மாவுக்கு பதிலடி கொடுத்த சூர்யா.. நந்தினி எடுக்க போகும் முடிவு

Moondru Mudichu Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மூன்று முடிச்சு சீரியலில், பணக்கார திமிருடன் இருக்கும் சுந்தரவள்ளி அடிக்கடி நந்தினி குடும்பத்தை அவமானப்படுத்தி வந்தார். அந்த வகையில் சுந்தரவள்ளிக்கு நந்தினியின் குடும்பத்தை பார்த்தாலே பிடிக்காது. இந்த சூழ்நிலையில் சூர்யாவுக்கு ரத்தினவேலு மகளான அர்ச்சனாவை கல்யாணம் பண்ணி வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

அர்ச்சனா பணக்கார வீட்டு பெண் என்பதால் சுந்தரவள்ளியும் இந்த கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டார். பிறகு பெற்றோர்களின் சம்மதத்தின் படி சூர்யா மற்றும் அர்ச்சனாவின் கல்யாணம் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. ஆனால் கல்யாணத்தில் சூர்யா கொடுத்த டுவிஸ்ட் அர்ச்சனா குடும்பத்திற்கும் சுந்தரவல்லிக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாக முடிந்து விட்டது.

அதாவது அம்மாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக அம்மாவுக்கு பிடிக்காத நந்தினி கழுத்தில் சூர்யா அதிரடியாக தாலி கட்டி விட்டார். இதனால் கோபப்பட்டு அர்ச்சனா, சூர்யாவையும் சுந்தரவள்ளியையும் திட்டிவிட்டு பழிவாங்க தயாராகி விட்டார். இதனை தொடர்ந்து சூர்யா நந்தினி கழுத்தில் தாலி கட்டியதால் வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார்.

வீட்டிற்கு வந்ததும் அங்கு வேலை பார்க்கும் நபர் இவர்களுக்கு ஆர்த்தி எடுக்கிறார். ஆனால் இதை பார்த்து கோபப்பட்ட சுந்தரவள்ளி அந்த ஆர்த்தி தட்டை தள்ளிவிட்டு இந்த வீட்டு வாசலில் கூட மிதிக்க தகுதி இல்லாத இவள் என் வீட்டு மருமகளா என்று அகங்காரத்துடன் பேசுகிறார். அத்துடன் நந்தினியின் அப்பாவையும் அவமானப்படுத்தும் விதமாக உன்னை இந்த கல்யாணத்திற்கு கூப்பிட்டதற்கு நீயும் உன் பொண்ணும் ஒன்னும் சேர்ந்து நல்லா செஞ்சு வச்சுட்டீங்க என்று ஆவேசமாக திட்டுகிறார்.

இப்படி வாய்க்கு வந்தபடி ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் சுந்தரவள்ளி இடம் என் பொண்டாட்டியை நான் உள்ளே கூட்டிட்டு வரத்தான் செய்வேன். என் பொண்டாட்டியே வீட்டுக்குள் கூட்டிட்டு போவதற்கு நான் யாருடைய பர்மிஷனும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று அம்மாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சூர்யா பதில் பேசுகிறார்.

இந்த கலவரத்தில் மாலினிக்கு தான் மிகப்பெரிய சந்தோஷம் என்பதற்கு ஏற்ப திமிர் பிடித்த அர்ச்சனாவை பழி வாங்கி விட்டோம் என்ற நினைப்பில் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆனால் இவ்வளவு நடந்தும் சூர்யா மற்றும் சுந்தரவல்லி இருவரும் மட்டும் மாறி மாறி சண்டை போடுகிறார்கள்.

ஆனால் இந்த விஷயத்தில் உண்மையாக பாதிக்கப்பட்டிருக்கும் நந்தினி எந்தவித பதிலும் சொல்லாமல் வாயை கூட திறக்காமல் மௌனமாக நிற்கிறார். எதிர்பார்க்காமல் சூர்யா, கழுத்தில் தாலி கட்டில் இருந்தாலும் அதற்கு எந்தவித பதிலும் சொல்லாமல் சூர்யாவை நம்பி வீட்டிற்கு வந்து நிற்கிறார்.

இதனை தொடர்ந்து அவர் எடுக்கப் போகும் முடிவு என்னவாக இருக்கும் சூர்யாவை திருத்தி நல்வழிக்கு கொண்டு வருவாரா? அல்லது சூர்யாவிடம் சண்டை போட்டு அந்த வீட்டில் வேலைக்காரியாக சுந்தரவல்லிக்கு எடுபிடி வேலை பார்ப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -

Trending News