சொந்த மண்ணுக்கு டாட்டா காட்டி மும்பைக்கு சென்ற ஜோ.. மனைவிக்காக பல கோடிகளை வாரி இறைக்கும் சூர்யா

விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு ரசிகர்களின் மத்தியில் நடிப்பு அரக்கனாகவே மாறிவிட்ட நடிகர் சூர்யா, தன்னுடைய 42-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படத்தில் ஹீரோயினாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி அழுத்தமான ரோலில் நடிக்கிறார்.

இதற்காக சூர்யா குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இந்தப் படத்தை இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் தயார் செய்கிறது. இதில் 5 வேடங்களில் சூர்யா மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

Also Read: ஓவர் நெருக்கம் காட்டும் சூர்யா.. எல்லா பக்கமும் கூடவே ஒட்டிக்கொண்டு சுற்றும் ஹீரோயின்

இந்நிலையில் சூர்யாவின் மனைவி ஜோதிகாவின் சொந்த ஊர் மும்பை. இருப்பினும் சூர்யாவின் அம்மா, அப்பா மற்றும் தம்பி குடும்பத்துடன் இணைந்த வாழும் ஜோதிகாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மும்பையில் பல கோடி செலவில் அவருடைய ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார்.

நடிகர் சூர்யாவிற்கு சென்னையில் பல வீடுகள் அரண்மனை போல் இருந்தாலும், அவர் தற்போது மும்பையில் எட்டு மாத காலமாக வசித்து வருகிறார். இதனால் தற்பொழுது மும்பையில் அவர் மனைவி ஆசைப்பட்டபடி 70 கோடியில் மிக பிரம்மாண்டமாக ஒரு வீடு வாங்கியுள்ளார்.

Also Read: லியோவை ப்ரீ பிசினஸில் முந்திய சூர்யா 42.. உண்மை நிலவரத்தை போட்டு உடைத்த தயாரிப்பாளர்

மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் 16வது ஃப்ளோரை ஒன்பதாயிரம் ஸ்கொயர் ஃபீட் அளவுடன் உள்ள இடத்தை வாங்கி இருக்கிறார். அந்த அளவிற்கு மும்பையில் பிசினஸ் இருப்பதால் மனைவியும் அங்கே இருக்க ஆசைப்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளார்.

சென்னையில் உள்ள வீடு இந்த அளவிற்கு பிரமாண்டமாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இது மனைவி ஜோதிகாவிற்காக வாங்கப்பட்ட வீடு. திருமணமான பிறகு ஜோதிகாவிற்கு சென்னை தான் சொந்த வீடானது. ஆனால் அவர் பிறந்து வளர்ந்த மும்பைக்கு பல வருடம் கழித்து குடி போனது ஜோவின் நீண்ட நாள் ஆசையாம். அதை இப்போது சூர்யா நிறைவேற்றி வைத்திருக்கிறார்.

Also Read: ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன அருண் விஜய்.. வணங்கான் படப்பிடிப்பில் லீக்கான புகைப்படம்

Next Story

- Advertisement -