10 லட்சம் வாங்கிய இயக்குனருக்கு 10 கோடி கொடுத்து லாக் செய்த சூர்யா.. அரக்கனுடன் போட்டி போட எடுத்த விபரீத முடிவு

Actor Suriya: சமீப காலமாகவே சூர்யாவின் போக்கு கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கிறது. சூர்யா முன்பு நண்பராக நெருங்கி பழகிய நடிகருடன் தற்போது கடும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார். அதிலும் எல்லை மீறி, ஒரே ஒரு படத்தை ஹிட் கொடுத்த இயக்குநரை பல கோடிகளைக் கொடுத்து லாக் செய்துள்ளார்.

அந்த இயக்குனர் முதலில் 10 லட்சம் தான் சம்பளம் வாங்கி இருப்பார், ஆனால் அந்த குறைந்த பட்ஜெட் பட இயக்குனரை வைத்து ஹிட் கொடுக்க வேண்டும் என்ற பேராசையில் சூர்யா 10 கோடிகளை வாரி கொடுத்து அவரை திணறடித்துள்ளார். இதனால் அந்த இயக்குனரும் தரமான கதையை உருவாக்குவதை காட்டிலும் கமர்ஷியல் படங்களை எடுப்பதில் தான் கவனம் செலுத்துவார்.

Also Read: தியேட்டரை மிஸ் செய்த 5 ஹிட் படங்கள்.. கல்நெஞ்சையும் கரைய செய்த ஜெய் பீம்

இதனாலேயே தரமான தமிழ் சினிமா வராமல் போய்விடுகிறது. பாலா இயக்கத்தில் சூர்யா, விக்ரம் இருவரும் இணைந்து நடித்த சூப்பர் ஹிட் ஆன படம் தான் பிதாமகன். இந்த படத்திற்குப் பிறகு விக்ரம், சூர்யா இருவருக்கும் ஒரு வாரே நடந்து வருகிறது. மும்பையில் வீடு வாங்குவது, ஹிந்தி பேச மாட்டேன் போடா என பனியனை போட்டுக்கொண்டு சுற்றுவது, சம்பாதித்த பணத்தை வைத்து கொண்டு மும்பையில் தொழில் தொடங்குவது, மும்பையில் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிப்பது என விக்ரமுடன் போட்டி போடுவதற்காக சூர்யா விபரீத முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

கோடம்பாக்கத்தில் எத்தனையோ தரமான கதைகளை வைத்துக்கொண்டு இளம் இயக்குனர்கள் சுற்றி வருகின்றனர். அவர்களை வைத்து படம் எடுக்காவிட்டாலும் அவர்களிடம் இருக்கும் கதையை வாங்கிக் கொண்டு வேறு இயக்குனர்களை வைத்து நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வரலாம்.

Also Read: 116 நாட்கள் ஷூட்டிங் நிறைவடைந்தது.. பரபரப்பு கிளப்பிய தங்கலான் ரிலீஸ் அப்டேட்

ஆனால் இந்த பொறுப்பை எல்லாம் மறந்து விட்டு ஒரு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் சூர்யா தேவையில்லாமல் விக்ரமுடன் போட்டி போடுவது கொஞ்சம் கூட சரியில்லை. தற்போது விக்ரம் பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே சமயத்தில் சூர்யா தன்னையும் நிரூபிக்க, 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி இவர்களுக்கிடையே மறைமுகமாக ஒரு போரே நடந்து வருகிறது. ஆனால் தமிழ் சினிமாவிற்கு விஜய், அஜித் இடையே நடக்கும் திரை மோதல் மட்டுமே வெளியில் தெரிகிறது. ஆனால் வெளியில் தெரியாமலே சூர்யா, விக்ரம் இருவரும் கடுமையாக ஒருவர் மற்றவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: சிறைச்சாலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 5 படங்கள்.. லாக்கப் மரணத்தை கண் முன் காட்டிய ஜெய் பீம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்