வேட்டையனுக்குப் பின் ரஜினி வைக்கும் பொறி.. கெத்து காட்டும் சூப்பர் ஸ்டார்

Superstar Rajini hike his salary for Thalaivar 171 and Jailer 2: அதாண்டா இதாண்டா சூப்பர் ஸ்டார் நான் தான்டா என்று அன்றும் இன்றும் என்றும் தமிழ் சினிமாவில் ஒரே சூப்பர் ஸ்டார் ஆக விளங்கும் ரஜினிகாந்த் அவர்கள் அசர வைக்கும் தனது வியூகங்கள் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை பின்னுக்கு தள்ளி எப்போதும் நான் தான் நம்பர் ஒன் என்று வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளார்.

72 வயதை கடந்துள்ள ரஜினி, வேகம் குறையாமல் இளம் தலைமுறைக்கு போட்டியாக மாஸ் காட்டி வருகிறார். நடுவில் பேட்ட படத்திற்கு பின் அண்ணாத்த, தர்பார் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் பல எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளானார். அதற்குப் பின் வந்த தயாரிப்பாளர்கள் சம்பளத்தையும் வெகுவாக குறைத்தனர்.

வயசானாலும் சிங்கம், சிங்கம் தான்டா! என்று என்பது போல்  நெல்சன் உடனான ஜெயிலரில் தரமான கம்பேக் கொடுத்து ஜெயிலரை மரண மாஸாக்கி இருந்தார். வாய் பேசியவர்கள் எல்லாம் வாயடைத்து போயினர். இப்போது அதுவல்ல செய்தி! அடுத்ததாக  ஜெயிலர் வெற்றிக்கு பின் ரஜினியின் சம்பளம் எவ்வளவு?

Also read: அடிபொலி! இது வேட்டையனின் பொங்கல்.. மாஸ் லுக்கில் வெளியான புதிய போஸ்டர்

ரஜினி, ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். எப்போதுமே சமூக கருத்துடன் மாற்றத்தை உருவாக்கும் ஞானவேல் அவர்களுடன் கூட்டணி உள்ளதால் கண்டிப்பாக இப்படம் அவரது கேரியரில் முக்கிய  திருப்பு முனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்டையனுக்கு பின் ஆக்சன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன்  தலைவர் 171 க்கு கைகோர்க்கிறார். திரைத்துறையில் இவர்களது கூட்டணி பெரிய அளவில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இப்போது 220 கோடி வாங்கும் சம்பளம் வாங்கும் தலைவர்,அடுத்ததாக தலைவர் 171 க்காக  250 முதல் 280 கோடி வரை சம்பளத்தை எதிர்பார்க்கிறாராம்.

அடுத்ததாக ஜெயிலர் 2 விற்கு 300 கோடி வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இப்போ வந்த விஜய் அஜித்துக்கு கொடுக்குறீங்க எனக்கும் வேணும்னு செக் வைக்கிறார் தலைவர். சம்பளத்தை குறைப்பதற்கு வாய்ப்பே இல்லாத மாதிரி  இதை தயாரிப்பு நிறுவனங்களிடமும் பேசி உள்ளது திரைத்துறையில் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

Also read: விஜய்யை விடாமல் துரத்தி பிடித்த ரஜினி பட இயக்குனர்.. பல நூறு கோடி முதலீட்டிற்கு சன் பிக்சர்ஸ் உடன் போட்டி போடும் நிறுவனம்

- Advertisement -spot_img

Trending News