உன்னோட யுனிவர்ஸ்ல எனக்கு ஒரு கதை எழுது.. இயக்குனருக்கு கட்டளையிட்ட ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்தே திரைப்படத்திற்கு பிறகு தற்போது இயக்குனர் நெல்சன் உடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 175 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் மூலம் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பணிபுரிய இருக்கிறார். மேலும் நடிகை தமன்னாவும் இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார். தமன்னா, ரஜினிக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Also Read: சூப்பர் ஸ்டார் போட்டுள்ள கண்டிஷன்.. மீறினால் தக்க நடவடிக்கை

ரஜினிகாந்துக்கு அண்ணாத்தே திரைப்படம் ஒரு மிகப்பெரிய தோல்வி படமாகவே அமைந்தது. மேலும் பல வருடங்களாக அவ்வளவாக வெற்றி படங்களை கொடுக்காத கமலஹாசனுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது. இந்த இரண்டுமே ரஜினிக்கு ஒரு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்திருக்கிறது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படம் ஒரு வெற்றி படமாக அமைந்தே ஆக வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறார் ரஜினிகாந்த். இதற்காக சாதாரணமாக தொடங்கப்பட்ட இந்த படத்தை தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு பான் இந்தியா படமாக மாற்றி இருக்கிறார்கள்.

Also Read: ரஜினியை மனுசனாக மாற்றிய பிரபல பாடகி.. மேடைப்பேச்சில் அசர வைத்த சூப்பர் ஸ்டார்

ஜெயிலர் திரைப்படத்தை மேலும் மேலும் மெருகேற்றியும் திருப்தி அடையாத ரஜினிகாந்த், தற்போது விக்ரம் படம் போல் வெற்றி படம் கொடுத்தே ஆக வேண்டும் என்று லோகேஷ் கனகராஜ் இடமே சென்று விட்டார். லோகேஷ் கனகராஜிடம் அடுத்த படத்தை தனக்கு இயக்குமாறு கூறியிருக்கிறார்.

ஏற்கனவே கார்த்தி, கமல், விஜய், சூர்யா போன்ற டாப் ஹீரோக்களை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு அடுத்து ரஜினிகாந்தை இயக்கவும் வாய்ப்பு கை கூடி வந்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யுடன் பணியாற்றி வரும் தளபதி 67 க்கு பிறகு ரஜினி- லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: கமலை காட்டிலும் ரஜினி எவ்வளவோ மேல்.. மேடையில் கிழித்து தொங்க விட்ட பிரபலம்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை