Connect with us
Cinemapettai

Cinemapettai

rajini-actor-tamil

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டார் போட்டுள்ள கண்டிஷன்.. மீறினால் தக்க நடவடிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இப்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது.

சமீபத்தில் ரஜினி தனக்கு இருந்த கெட்ட பழக்கங்களிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பதை ரசிகர்களிடம் சொல்லி இருந்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ரஜினி ஒரு அறிக்கை விட்டுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read : ரஜினியை மனுசனாக மாற்றிய பிரபல பாடகி.. மேடைப்பேச்சில் அசர வைத்த சூப்பர் ஸ்டார்

அதாவது தன்னுடைய அனுமதி இன்றி என்னுடைய பெயர், புகைப்படம் மற்றும் குரல் ஆகியவற்றை வர்த்தக ரீதியாக பயன்படுத்தக் கூடாது என்று ரஜினியின் வழக்கறிஞர் நோட்டீஸ் வெளியிட்டு உள்ளார். மேலும் இதை மீறுவோரின் பெயரில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது சமீபகாலமாக பிரபலங்களின் புகைப்படத்தை வைத்து சிலர் தவறாக பணம் சம்பாதித்து வருகிறார்கள். இது அந்த நடிகர்களின் பெயருக்கு களங்கம் வகிக்கிறது. இதை தடுப்பதற்காக தான் ரஜினி தற்போது என்னை சார்ந்த விஷயங்களை அனுமதி இன்றி யாரும் பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளார்.

Also Read : ஆரம்பிக்கும் முன்பே ஏற்பட்ட மோதல்.. கேரியருக்காக 30 வருட நட்பை உடைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

மேலும் பல மேடை கலைஞர்கள் ரஜினி போன்று வேடமிடுவது, பேசுவது என பணம் சம்பாதித்து வருகிறார்கள். அவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என சிலர் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள். மேலும் ரஜினியின் இந்த கருத்துக்கு ஒரு புறம் ஆதரவும், சிலர் எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்கள்.

இப்போது ரஜினி ஜெயிலர் படத்தை முடித்த கையோடு அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இதைத்தொடர்ந்து லைகா தயாரிப்பில் அடுத்த இரண்டு படங்களில் ரஜினி நடிக்க உள்ளதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது.

Also Read : சூர்யா பட வெற்றி இயக்குனரை தட்டி தூக்கிய ரஜினி.. உறுதியான அடுத்த பட போலீஸ் காம்போ

Continue Reading
To Top